காதிர் முகைதீன் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. ஜலால் தூய்மை திட்டத்தை தொடங்கி வைத்தார். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் உதுமான் முகைதீன் முன்னிலை வகித்தார்.
காதிர் முகைதீன் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் பேராசிரியர் சையது அகமது கபீர், முனைவர் ஓ.சாதிக், முனைவர் எஸ்.சாபிரா பேகம், பேராசிரியர் பிரேம் நவாஸ் ஆகியோர் தலைமையின் கீழ் இயங்கும் நாட்டு நலப்பணி திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை தூய்மை படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
எல்லோரும் முதலில் அவரவர் வீட்டையும் அதை சுத்தியுள்ள பகுதிகளையும் சுத்த படுத்த வேண்டும்.வகுப்பு நேரங்களில்; மாணவர்களிடம் தினமும் சுத்தம் செய்ய சொன்னால் செய்வார்கள்,அதே மாணவர்கள் வீட்டை சுத்தம் செய்ய சொன்னால் சொன்னவர்க்கு டோஸ் தான் கிடைக்கும். இந்நிலை மாறவேண்டும்.
ReplyDelete