.

Pages

Tuesday, February 24, 2015

துபாய் சாலையில் பொழிந்த பண மழை: வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு பணத்தை அள்ளி சென்ற மக்கள் !

துபாய் நகரில் வசிக்கும் மக்களில் பலருக்கு கடந்த 11-ந்தேதி மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. அன்று மதியம் துபாயின், ஜூமைரா பகுதியிலுள்ள பிரதான சாலையில், திடீரென சூறாவளி காற்று வீசியது.

இந்த காற்றில் 500 திர்ஹாம் மதிப்பு கொண்ட ஆயிரக்கணக்கான நோட்டுக்கள் சாலையில் பறந்து வந்து விழுந்தன. அப்போது சாலையில் வந்துக்கொண்டிருந்த வாகன ஓட்டிகள் அனைவரும் தங்களது வாகனங்களை நடு ரோட்டிலேயே நிறுத்திவிட்டு பணத்தை அள்ள பாய்ந்தனர். இப்படி பாய்ந்த ஏராளமானோர் தங்கள் கைநிறைய பணத்தை அள்ளிக்கொண்டு சென்றனர்.

இந்த பணம் எங்கிருந்து வந்தது. அது யாருடையது என்று யாருக்கும் தெரியவில்லை. ஏறத்தாழ 2 முதல் 3 மில்லியன் திர்ஹாம் தொகை காற்றில் பறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பணமழை பொழிந்தது குறித்து அந்நகர் வாசி ஒருவர் கூறுகையில்... 
‘எனது மனைவி காரில் சென்று கொண்டிருந்தபோது, காற்றில் பறந்து சாலையில் விழுந்த பணத்தை வாகனம் ஓட்டி வந்த பலர் அள்ளி செல்வதை பார்த்தார். உடனே காரிலிருந்து வெளியே குதித்த எனது மனைவி, அந்த காட்சிகளை தனது வீடியோவில் படமாக்கினார்’ என்றார்.

ஒருவழியாக பணம் சாலையில் கிடப்பது பற்றி காவல்துறையினருக்கு கிடைத்தது. விரைந்து வந்த அவர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
நன்றி:மாலை மலர்

4 comments:

  1. இந்தப் பணம் நல்ல பணமா? அல்லது கள்ளப் பணமா?

    ReplyDelete
  2. I heard that this is not in Dubai, it was in Kuwait. Adirai News..please do not publish such kind of news unless you know 100%

    ReplyDelete
  3. http://gulfnews.com/news/gulf/kuwait/millions-in-cash-rain-in-kuwait-not-dubai-1.1462311

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.