.

Pages

Tuesday, February 24, 2015

பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அரசு பொதுத்தேர்வு ஆலோசகராக தலைமை ஆசிரியர் மஹபூப் அலி தேர்வு !

எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெரும் அனைத்து உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு பொதுத்தேர்வு தொடர்பான கருத்துகளை வழங்கும் ஆலோசகராக நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

6 comments:

  1. ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன மகனை சான்றோன் எனக் கேட்ட தாய்.

    பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. பட்டய கிளப்புங்க சார், இப்பொல்லாம் மத்திய- மாநில அரசு அலுவலங்களில் ஆவணங்கள் திருட்டு போய் கோடிக்கணக்கான முறைகேடு நடந்திருக்கு, அங்கே வேலைப்பார்க்கும் அதிகாரிகளே காரணமாக இருக்காங்க. வகுப்பில் பென்சில் காணாமல் போனால் எடுத்தவனை நல்ல தலையில் குட்டுங்க சார்.இவங்க தான் வருங்கால இந்தியாவில் பணிபுரியும் அதிகாரிகள்.

    ஆணவம் இருக்கற அரசுக்கு ஆவணம் இருந்தால் என்ன இல்லாட்டி என்ன என்று நினைக்கும் அதிகாரிகளுக்கு நல்ல ஆலோசனை வழங்குங்கள். வினா தாள் இருக்கும் இடத்துக்கும் விடை தாள் இருக்க போகும் இடத்துக்கும் 24 X 7 செக்யூரிட்டி போட்டுடுங்க , மேலப்பாளையத்தில் ஒரு பள்ளியில் விடைத்தாளை எரிசிட்டாங்க. உஷார்

    ஒருநிமிஷம், உங்க Picture with background பார்க்கும்போது சேரன் மாதிரி தெரியுது சூப்பர் இதுக்கு மேல எழுதினா என் தலையில் குட்டுவீங்க.

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள்...
    மேலும் மேலும் சிறப்புக்கள் பெற்று நமது பள்ளிக்கும், ஊருக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. தகுதி படைத்த தலைமை ஆசிரியர் ஹாஜி மஹ்பூப் அலி M.Sc., M.Phil., M.Ed. அவர்களே, காதிர் முகைதீன் கல்வி நிறுவனத்தின் பெருமை சேர்க்கும் பெருமகனாய் வாழ வல்ல இறைவனை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. மனமார்ந்த வாழ்த்துக்கள்,

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.