முத்துப்பேட்டையில் டி.எஸ்.பி யாக பணியாற்றிய கணபதி என்பவரை இடம் மாற்றம் செய்யக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம் அறிவித்தது. இதனையடுத்து காவல் துறை உயர் அதிகாரிகள் அவரை பெரம்பலூருக்கு பணி இடம் மாற்றம் அதிரடியாக செய்தனர். இந்த நிலையில் காலியாக இருந்த அந்த பதிவிக்கு ஏ.எஸ்.பி அல்லது நேரடி டி.எஸ்.பி. அதிகாரியை நியமணம் செய்ய வேண்டும் என்று இப்பகுதி பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். அதனால் அதிகாரிகளை நியமணம் செய்வதில் கால தாமதமானது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கன்னியாகுமரியில் நேரடி பயிற்சி முடிந்து பணியாற்றிய அருண் என்பவர் முத்துப்பேட்டையில் புதிய டி.எஸ்.பியாக பதவி ஏற்றார்.
பின்னர் நிருபர்களுக்கு அளித்தப்பேட்டியில் அவர் கூறுகையில்:
'முத்துப்பேட்டை பகுதியில் சட்ட ஒழுங்கு நிலைநாட்டப்படும். குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாச்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் தேவையில்லாத பிரச்சணையில் ஈடுப்படுபவர்களும், ஜாதி, மதம் பேரில் அப்பாவி பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீதும் இரும்பு கரம் கொண்டு அடக்கப்படும். மது குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டுப்பவர்கள், உரிய உரிமம் இல்லாதவர்கள், டூவீலர்களில் 2 நபர்களுக்கு மேல் செல்பவர்கள் மீதும் தக்க நடவடிக்கையின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். நகரில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு அளிக்கும் வகையில் உள்ள ஆக்கிரமிப்புகளை சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அகற்றி போக்குவரத்தை சரி செய்யப்படும். மணல் கடத்தல் மற்றும் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்க நகர் மற்றும் கிராம புரங்களில தீவிர ரோந்து பணி மேற்கொள்ளப்படும். விபச்சாரம,; கஞ்சா வியாபாரம் ஆகியவைகளில் ஈடுப்பட்டு வருபவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். பாதிக்கப்படும் பொது மக்கள் எந்த நேரத்திலும் அலுவலக நம்பரான 04369-260449 என்ற எண்ணை தொடர்ப்புக்கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
செய்தி மற்றும் படம்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.