.

Pages

Thursday, March 12, 2015

பட்டுக்கோட்டையில் வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை: ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் கைது !

தமிழகத்தில் அதிகரித்து வரும் லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த கோரியும், தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த கோரியும் எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் இன்று காலை நடைபெற்றது.

போராட்டதிற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஏ.கே சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் அமானுல்லா மற்றும் பி.எஃப்.ஐ மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக பேரணி மதுக்கூர் - முத்துப்பேட்டை செல்லும் முக்கூட்டு சாலையிலிருந்து புறபட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்கள் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தின் போது லஞ்சம் ஊழலுக்கு எதிரான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டாச்சியர் அலுவலகம் செல்லும் சாலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

1 comment:

  1. அடடா சூப்பர், மக்களுக்கு விழிப்புணர்வு வர இது நல்ல போராட்டம் அப்படியே ஒவ்வொரு ஊருக்கும் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் திறந்திடுங்கள், அரசு லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது. எல்லா அரசு அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் தேவை அதிலும் முக்கியமா அதிரை schedule போட்டு லஞ்சம் வாங்குறான்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.