போராட்டதிற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் சேக் ஜலாலுதீன், மாவட்ட செயலாளர் மதுக்கூர் செய்யது முஹம்மது, மாவட்ட பொருளாளர் ஏ.கே சாகுல்ஹமீது, மாவட்ட துணை தலைவர் அமானுல்லா மற்றும் பி.எஃப்.ஐ மாவட்ட செயலாளர் எம்.முஹம்மது பைசல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக பேரணி மதுக்கூர் - முத்துப்பேட்டை செல்லும் முக்கூட்டு சாலையிலிருந்து புறபட்டு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட புறப்பட்டது. அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார்கள் போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பட்டுக்கோட்டை தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் போது லஞ்சம் ஊழலுக்கு எதிரான துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. இந்த போராட்டத்தால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வட்டாச்சியர் அலுவலகம் செல்லும் சாலை பெரும் பரபரப்பாக காணப்பட்டது.















அடடா சூப்பர், மக்களுக்கு விழிப்புணர்வு வர இது நல்ல போராட்டம் அப்படியே ஒவ்வொரு ஊருக்கும் லஞ்ச ஒழிப்பு அலுவலகம் திறந்திடுங்கள், அரசு லஞ்ச ஒழிப்பு அலுவலகத்தில் லஞ்சம் கொடுத்தால் தான் நடவடிக்கை எடுக்கும் நிலையில் உள்ளது. எல்லா அரசு அலுவலகங்களின் முன்பாக ஆர்ப்பாட்டம் தேவை அதிலும் முக்கியமா அதிரை schedule போட்டு லஞ்சம் வாங்குறான்.
ReplyDelete