.

Pages

Wednesday, March 11, 2015

பட்டுக்கோட்டையில் நடைபெற்ற உலக மகளிர் தினம் கொண்டாட்டம் !

ஜே.சி.ஐ  பட்டுக்கோட்டை விங்ஸ்ன் சார்பாக மார்ச் 7 மற்றும் 8 ஆகிய இரு தினங்கள் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இவ்விழா முன்னாள் நகர் மன்றத்தலைவி திருமதி ஜெயபாரதி விஸ்வநாதன் குத்துவிளக்கை ஏற்றி வைக்க, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் திரு என்.ஆர்.ரெங்கராஜன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

பெண்கல்வி சிந்தனைக்கும், சிந்தனை பெண்களை புதிய இலக்குகள் நோக்கியும் நடைபோட வைக்கவேண்டும் என்று பேராசிரியர் கோவி. சந்திர சேகரும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற குணங்களுக்கு புதிய இலக்கணம் காணவேண்டிய காலம் இதுவென்று பேராசிரியர் சையத் அகமது கபிரும், சங்க காலம் முதல் தற்காலம் வரை பெண்கள் முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய தலைமைப்பண்புமிக்க பெண்களைஆசிரியர் பயிற்றுநர் திருமதி அமுதாவும் தத்தமது பேச்சுகளில் சுட்டக்காட்டினார்.

இவ்விழாவில் கலந்துகொண்டு பல்வேறு போட்டிகளில்- கோலம், சமையல், வினாடிவினா, மௌனமொழி, பாட்டுக்குப்பாட்டு மற்றும் அழகிப்போட்டி- பங்குப்பெற்று பரிசு வென்றவர்களுக்கு பரிசுப்பொருட்கள் ஜே.சி.ஐ பட்டுக்கோட்டை விங்ஸ்ன் தலைவர் ஜே.சி.க வெங்கடேஷ் அவர்களால் வழங்கப்பட்டன. ஜே.சி.வெ.ஆஷா நன்றி  நவில விழா இனிதே முடிவடைந்தது.
   
 
 

1 comment:

  1. தயவு செய்து திருந்தப்பாருங்கள். தொலை காட்சிகளில் வரும் விளம்பரங்களை தயவு செய்து நம்பாதீர்கள். அது உங்கள் நேரத்தையும் உங்கள் மனோ பலத்தையும் குறைத்து விடும். உதாரணமாக இரண்டு விளம்பரங்களை இங்கு சொல்கிறேன். ஒன்று இந்துலேகா கூந்தல் தைலம். இதை பயன்படுத்தா விட்டால் வருடத்திற்கு ஏறத்தாழ 36,000 முடியை இழந்து விடுவோம் என்று பயமுறுத்துகிறது. இரண்டாவது HORLICKS WOMEN இதை பயன் படுத்தாவிட்டால் பெண்களே உங்களுக்கு LOW BONE DENSITY எனப்படும். எலும்பில் அடர்த்தி குறைவு ஏற்பட்டு உங்கள் எலும்புகள் உடைந்து விடும் என்று பயமுறுத்துகிறது. இந்து லேகா கூந்தல் தைலம், HORLICKS WOMEN இவையெல்லாம் இப்போது வந்தவையே. ஆனால் இவை வருவதற்கு முன் நம் முன்னோர்கள் நல்ல நலமுடன் ஆரோக்கியமாகவே வாழ்ந்திருக்கிறார்கள். தொலைகாட்சி நிறுவனங்களே தயவு செய்து நல்ல விளம்பரங்களை மக்களுக்கு தாருங்கள். இப்படிப்பட்ட பயமுறுத்தும் விளம்பரங்களை தவிர்த்து விடுங்கள். இல்லையேல் உங்கள் தொலை காட்சி களை மக்கள் தவிர்த்து விடுவார்கள்.

    விளம்பரத்தை தவிர்ங்கள் பணத்தை சேமியுங்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.