.

Pages

Wednesday, March 11, 2015

தனியார் பேருந்தில் திடீர் புகை: பயணிகள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் !

முத்துப்பேட்டையில் நேற்று காலை பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் தனியார் பேருந்து ஒன்று பழைய பேருந்து நிலையத்திற்கு வந்தது. பின்னர் பயணிகளை ஏற்றிக் கொண்டு பேருந்து புறப்பட கிளம்பிய போது திடீரென்று பேருந்தின் முன்பக்கத்திலிருந்து அதிகளவில் புகை வெளியேறியது. அதனையடுத்து டிரைவர் மற்றும் நடத்துநர்கள் புகையை அணைக்க போராடினர். நீண்டி நேரமாகியும் புகை அணையாமல் அதிகளவில் வந்துக்கொண்டே இருந்ததால் பேருந்து தீப்பற்றி எறிந்து விபத்து ஏற்பட்டு விடுமோ? என்று அவர்கள் அதிர்ச்சி அடைந்து பேருந்தைவிட்டு கிழே இறங்கினர். இதனை கண்ட பயணிகளும் பேருந்தை விட்டு அலறி அடித்துக்கொண்டு இறங்கி ஓடினர். இதனால் பழைய பேருந்து நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பாகி பொதுமக்கள் மற்றும் பயணிகள் கூட்டமாகக்கூடி தூரத்தில் நின்று பெரும் அச்சத்துடன் வேடிக்கைப்பார்த்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடைப்பட்டது. பின்னர் பேருந்துகளின் மற்ற டிரைவர்கள் எல்லாம் சேர்ந்து அந்த பகுதியில் சென்ற தனியார் குடிநீர் லாரிலிருந்து குழாய் மூலம் தண்ணீரை பீச்சி அடித்து புகையை கட்டுக்குள் கொண்டு வந்து சரி செய்தனர். இதனால் பல மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பும,; பதற்றமும் ஏற்பட்டது.

செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.