தஞ்சாவூர் மாவட்டத்தில் 25% சேர்க்கையைச் செயல்படுத்தாத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர் என். சுப்பையன்.
ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
மாவட்டத்தில் குழந்தைகளுக்கான கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, அனைத்து சிறுபான்மையற்ற தனியார், சுயநிதி பள்ளிகளில் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு நுழைவு நிலை வகுப்புகளில் குறைந்தபட்சம் 25% இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
வரும் கல்வியாண்டு (2015-16) முதல் சிறுபான்மையற்ற தனியார், சுயநிதிப் பள்ளிகளில் தொடக்க நிலை வகுப்புகளில் பள்ளி வாரியாக உள்ள மொத்த இடங்கள் மற்றும் 25% இடங்கள் குறித்த விவரங்களை இணையதளம், அலுவலகத் தகவல் பலகைகள், பள்ளி தகவல் பலகைகள் ஆகியவற்றில் அறிவிப்பு செய்ய வேண்டும்.
அரசாணைப்படி, 25% சேர்க்கைக்கு மே 4-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட வேண்டும். மேலும், முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகம், அனைத்து உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்கள், அனைத்து பள்ளிகள் ஆகியவற்றில் விண்ணப்பங்கள் வழங்கப்படும். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மே 19-ம் தேதி மாலை 5 மணிக்குள் தொடர்புடைய பள்ளிகளில் அளிக்க வேண்டும். இந்த 25% சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் மே 25-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பள்ளி தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும்.
மாவட்டத்தில் 25% ஒதுக்கீட்டின்படி 194 மழலையர் மற்றும் தொடக்க பள்ளிகளில் 2,033 இடங்களும், 91 மெட்ரிக் பள்ளிகளில் 1,519 இடங்களும், ஒரு மேல்நிலைப் பள்ளியில் 8 இடங்களும், 16 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 218 இடங்களும் என மொத்தம் 302 பள்ளிகளில் 3,778 இடங்களில் சேர்க்கை செய்யப்படும். 25% சேர்க்கையைச் செயல்படுத்தாத பள்ளிகளின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஆட்சியர்.
முதன்மைக் கல்வி அலுவலர் வே. தமிழரசு, திட்ட இயக்குநர் கோபாலகிருஷ்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் ரெங்கநாதன் (தஞ்சாவூர்), அண்ணாப்பிள்ளை (கும்பகோணம்), ராஜசேகர் (பட்டுக்கோட்டை), மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் கண்ணையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.