நிகழ்ச்சிக்கு அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.எச் அஸ்லம் தலைமை வகித்தார். ஹாஜி A.M இக்பால், ஹாஜி M.S. உமர், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி S. முஹம்மது ஹசன், தாஜுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி M.M.S சேக் நசுருதீன், காதிர் முகைதீன் கல்வி நிறுவனங்களின் முன்னாள் செயலாளர் ஹாஜி S.M.S அஸ்லம், அதிரை பேரூராட்சி துணை தலைவர் என் பிச்சை, அதிரை அப்துல் அஜீஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தனது 70 வயதிலும் தினமும் நடைபயிற்சியை ஆர்வத்துடன் மேற்கொண்டு வரும் நமதூர் சமூக ஆர்வலர் A.M.K அகமது அவர்கள் நடை பயிற்சி பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதைதொடர்ந்து நமதூரின் பிரபல மருத்துவர் H அப்துல் ஹக்கீம் வாழ்த்துரை வழங்கினார்.
நமதூரின் பிரபல தொழில் அதிபரும், சமூக ஆர்வலருமாகிய ஹாஜி ஜனாப் M.S தாஜுதீன் அவர்கள் நடைமேடை பராமரிப்பு பொறுப்பை நமதூர் இமாம் ஷாஃபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைத்தார்.
முன்னதாக காதிர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரை ஆற்றி, நிகழ்ச்சிகள் அனைத்தையும் இனிய தமிழில் அழகாக தொகுத்து வழங்கினார். சிறுவன் அஹமது முகைதீன் கிராத் ஓதினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மஹ்ரிப் தொழுதவுடன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட சென்னை காயிதே மில்லத் ஆண்கள் கலை அறிவியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஜே. ஹாஜா கனி, 'உடற்பயிற்சியும், உணவுப் பழக்கமும்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
























Masha allah
ReplyDeleteIt is a great momentum in our township especially in Shamsul Islam Sangam area. May Allah give them barakath whoever worked for constructing this walk way.
ReplyDeleteசபாஷ அதிரை நியுஸ்! நேற்றுதான் பார்த்தேன் ஒரு சகோதரர் சேர்மன் அவர்கள் அரசு மருத்துவமனை விஷயத்தில் இந்த ஊடகம் தொகுப்பு செய்திகள் ஒரு நேர்முக வருணனை போல் உள்ளது என்று குறிப்பிட்டிருந்ததை.. அதை இன்னும் மெய்பிப்பதுபோல் உள்ளது இன்றைய நடைபயிற்சி பாதை திறப்பு விழா நிகழ்ச்சி செய்தியும் படத்தொகுப்பும். உங்கள் பனி தொடரட்டும். வாழ்த்துக்கள்..
ReplyDeleteMasaallah
ReplyDeleteஅதிரைநியுஸ்க்குநன்றி உடனுக்குஉடன் செய்திகள்
ReplyDeleteAssalamu Alaikkum
ReplyDeleteDear All,
The chief concern of safety of people slipping or losing the lives have been prevented by this noble act of Mr. M.S.Tajudeen. May Allah reward him and protect him.
Thanks and best regards
B. Ahamed Ameen from Dubai.