.

Pages

Wednesday, February 21, 2018

அமீரகத்தில் பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது சிறுமிக்கு போலீஸ் பாராட்டு!

அதிரை நியூஸ்: பிப்.21
அமீரகத்தில் சமயோகிதமாக போலீஸை அழைத்து பெரும் தீ விபத்தை தடுக்க உதவிய 10 வயது சிறுமிக்கு ஷார்ஜா போலீஸ் பாராட்டு.

அமீரகம், ஷார்ஜாவின் திப்பா அல் ஹொஸன் பகுதியில் உள்ள ஒரு 2 மாடி கட்டிடத்தின் 2வது மாடியில் குடும்பத்தினருடன் தங்கி இருப்பவர் சாரா அலி அஹ்மது என்கிற 10 வயது இமராத்தி சிறுமி. இவர் தங்கியிருந்த கட்டிடத்தின் கீழ்ப்பகுதியில் தீப்பற்றி எரியத் துவங்கியதை கண்ட சிறுமி உடனே 999 என்ற எண்ணில் போலீஸை அழைத்து தீப்பற்றியது பற்றி தெரியப்படுத்தினாள்.
சிறுமி சாராவின் சமயோகித செயலால் தீ அணைக்கப்பட்டதுடன் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்தவர்களின் உயிரும் உடைமைகளும் தகுந்த நேரத்தில் காக்கப்பட்டன.

இச்சிறுமியின் செயற்கரிய செயலை அங்கீகரித்த ஷார்ஜா போலீஸ், சிறுமி சாராவுக்கு மேலும் உத்வேகம் தரும் வகையிலும் பிற சிறார்களுக்கும் நல்ல முன்மாதிரியாக அமையும் வகையிலும் சிறுமி சாரா பயிலும் பள்ளிக்கூடத்திற்கே நேரில் சென்று பாராட்டி, நற்சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.