.

Pages

Wednesday, February 28, 2018

ஓமனில் மார்ச் 22 முதல் நாட்டுக்கு அனுப்பும் பணத்தின் அளவை கண்காணிக்க புதிய சட்டம்!

அதிரை நியூஸ்: பிப்.28
எதிர்வரும் 2018 மார்ச் 22 ஆம் தேதி முதல் பெரிய அளவில் பிற நாடுகளுக்கு பணம் அனுப்பும் அல்லது எக்ஸ்சேஞ்சுகளில் மாற்றும் பணத்தை கண்காணிக்கவும், அது எதற்காக அனுப்பப்படுகிறது, எவ்வாறு அந்தப் பணம் திரட்டப்பட்டது என்பது பற்றியும் Enhanced Due Diligence என்ற சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிவர்த்தனை Anti-Money Laundering law சட்டத்தின் கீழ் நீட்சியாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டத்தின் மூலம் 400 ஓமன் ரியால்களுக்கு (சுமார் 1,040 டாலர்) மேல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடும் அனைவரும் பதில் சொல்லியாக வேண்டும்.

உங்கள் சம்பளத்திற்கு மேலதிகமாக அனுப்பப்படும் பணம், போனஸ், அட்வான்ஸாக பெறப்பட்ட சம்பளம் மற்றும் வங்கிகளில் பெறப்பட்ட லோனாக இருந்தாலும் சரியே, இந்தப் பணம் எங்கிருந்து எவ்வாறு கிடைத்தது என்பதிற்கான காரணத்தை ஆதாரத்துடன் தெரிவிக்க வேண்டும்.

Sources: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.