![]() |
File Image |
அமீரகம், அபுதாபியின் புறநகர் பகுதியான மப்ரக் பாலத்திலிருந்து (Mafraq Bridge towards Dubai) துபை நோக்கிச் செல்லும் சாலையில் ஒரு இந்தியர் அனுமதிக்கப்படாத இடத்தில் கம்பி வேலியில் ஏறிக்குதித்து சாலையை கடக்க முயன்றபோது வேகமாக வந்த வாகனத்தில் அடிபட்டு சிகிச்கைக்காக சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
இந்த எதிர்பாரா விபத்தை ஏற்படுத்திய இன்னொரு இந்தியர் தான் ஓட்டி வந்த வாகனத்தை விபத்து நடந்த இடத்திலேயே நிறுத்திவிட்டு தப்பித்துச் சென்றார். எனினும் அபுதாபி போலீஸார் விபத்து நடைபெற்ற 2 மணிநேரத்தில் அவரை மடக்கிப் பிடித்தனர்.
அவர் அபுதாபி விமான நிலையத்திலிருந்து பறப்பதற்கு இன்னும் 30 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பிடிபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீரகத்தில் விபத்துப் பகுதியிலிருந்து சம்பந்தப்பட்டவர்கள் தப்பிச் செல்வது கடும் குற்றமாகும். பிடிபட்டவருடைய விஷயத்தில் அடிபட்டு இறந்தவர் மீது குற்றம் இருக்கையில் வம்படியாக தப்பிக்க நினைத்து தன்னைத்தானே சிக்கவைத்துக் கொண்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.