அதிரை நியூஸ்: பிப்.18
வித்தியாசமான காரணங்களுக்காக விமானம், கப்பலில் இருந்து இறக்கிவிடப்பட்ட பயணிகள்.
துபையிலிருந்து ஆம்ஸ்டர்டாம் சென்ற டிரான்ஸாவியா ஏர்லைன்ஸ் (Transavia Airlines HV6902) எனும் பட்ஜெட் ஏர்லைன்ஸில் சென்ற வயதான ஒருவர் தன்னுடைய முதிய வயது மற்றும் உடல் உபாதையின் காரணமாக தொடர்ந்து 'காற்றை வெளியிட்டுக்' கொண்டிருந்தாராம். இதனால் எரிச்சலுற்ற சில பயணிகள் அவரை உடனே நிறுத்துமாறு சச்சரவு செய்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் வாய்ச்சண்டை முற்ற எரிச்சலுற்ற விமானி போகும் வழியில் ஆஸ்திரியா தலைநகர் வியன்னாவில் தடாலடியாக தரையிறக்கி 2 டச்சு இளைஞர்களையும் அதே வரிசையில் அமர்ந்திருந்த வேறு 2 இளம் பெண்களையும் இறக்கிவிட்டு சென்றுள்ளதுடன் அவர்களுக்கு அந்த விமான நிறுவனத்தின் விமானங்களில் பறக்க வாழ்நாள் தடையையும் பெற்றுத் தந்துள்ளனர். அந்த 2 இளம் பெண்கள் மட்டும் 'அதே வரிசையில் அமர்ந்திருந்த பாவத்தை தவிர நாங்கள் வேறு என்னய்யா செய்தோம்' என புலம்பிக் கொண்டுள்ளனர்.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் இருந்து புறப்பட்ட ஒரு சொகுசுக் கப்பலில் 10 நாள் பயணமாக புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேர் தொடர்ந்து பிற பயணிகளுடன் சண்டையிட்டதால் மீண்டும் துறைமுகத்திற்கு திரும்பி அவர்கள் அனைவரையும் இறக்கிவிட்டுச் சென்றுள்ளது. அவர்களில் சிலரை கப்பல் கரை திரும்பும் வரை கப்பலில் உள்ள லாக்கப்பிலும் வைத்திருந்துள்ளனர். காரணம், கழிவறைக்காக லைனில் நிற்பதில் ஏற்பட்ட சர்ச்சை தானாம்.
Source: StepFeed / Msn / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.