.

Pages

Tuesday, February 20, 2018

கிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஆட்சியர் அறிவுறுத்தல்!

தஞ்சாவூர் அரண்மனை வளாகம், சங்கீத மகாலில் சமூக பாதுகாப்புத் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும்  குற்றங்கள் தடுத்தல் தொடர்பான பயிற்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை இன்று (20.02.2018) தொடங்கி வைத்தார்.

இப்பயிற்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் தடுத்தல் தொடர்பான பயிற்சியை தொடங்கி வைத்து பேசியதாவது;
ஒவ்வொரு வயதினருக்கும், ஒவ்வொரு உரிமை உண்டு. அதே போல் குழந்தைகளுக்கு ஒரு உரிமை உண்டு. கிராமங்களில் தான் பல்வேறு விதமாக குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடைபெற வாய்ப்புள்ளது.  கிராமத்தில் ஒரு கொலை குற்றம் நடந்தாலும், கிராம நிர்வாக அலுவலர் தான் முன்னின்று காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.  அதே போன்று சட்டம், ஒழுங்கு தொடர்பாகவும் பிரச்சினை ஏற்பட்டாலும் தெரியப்படுத்த வேண்டும். கிராமத்தில் குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் (குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல்), குழந்தை கடத்தல், இவைகள் கிராமத்தில் தான் நடைபெறுகிறது.  குறிப்பாக 18 வயதிற்குள் திருமணம் செய்வதனால் ஏற்படும் தீமைகளின் அதனால் அரசினுடைய திட்டங்கள் கிடைக்காமல் போகும் என்பதையும்  கிராம நிர்வாக அலுவலர்கள் மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். 18 வயது பூர்த்தியடைந்தவுடன் திருமணம் செய்வதனால் ஏற்படும் நன்மைகளையும் எடுத்துக் கூற வேண்டும். 

வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.  கிராமத்திற்கு தேவையான சாலை வசதி, தெரு விளக்கு வசதி, குடிநீர் வசதி ஆகிய வசதிகளை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செய்து கொடுக்க வேண்டும்.  கிராமங்களில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்க வேண்டும்.  வருங்கால சந்ததியினருக்கு உரிமைகளை பாதுகாத்து நாம் உறுதுணையாக இருப்போம்.  இந்த பயிற்சியை முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை பேசினார்.

இப்பயிற்சி கூட்டத்தில் வருவாய் கோட்டாடசியர் சுரேஷ், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நடராசன், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர்கள் சி.திலகவதி, பி.மோகன்,  தொழில் ஆய்வாளர் இர.கவிஅரசு, சைல்டுலைன் பெ.பாத்திமாராஜ் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுலவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.