அதிரை நியூஸ்: பிப்.15
பிறந்த குழந்தையை தாயிடமிருந்து பிரித்து 5 மாதம் சிறைவைத்த 'இரக்கமில்லா மருத்துவமனை'.
மத்திய ஆப்பரிக்காவின் 'கபோன்' (Gabon) எனும் நாட்டிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று குழந்தை பிறந்தது முதல் தொடர்ந்து 5 மாதங்கள் குழந்தையை அதன் தாயிடமிருந்து பிரித்து மருத்துவமனையினுள் தடுத்து வைத்துக் கொண்டது, காரணம் அதன் தாயால் பிரசவ மருத்துவ கட்டணங்களை செலுத்த முடியாததே.
சுமார் 2 மில்லியன் கபோன் நாட்டுப்(CFA) பணத்தை திரட்ட ($3,630; £2,610) சமூக வலைத்தளங்களில் முயற்சி மேற்கொள்ளப்பட்டதை அடுத்து அந்த நாட்டின் ஜனாதிபதி அலி போங்கோ உட்பட பலரும் நிதியளித்து உதவியதை அடுத்து 5 மாதங்களுக்குப் பின் குழந்தை மீட்கப்பட்டது. எனினும் என்னால் என் குழந்தைக்கு தாய்ப்பால் வழங்க முடியாத நிலையில் உள்ளேன், 5 மாதங்கள் தொடர்ந்து குழந்தைக்கு தாய்ப்பால் சுத்தமாக வற்றிப்போய்விட்டது என வருத்தப்படுகிறது அந்த தாயுள்ளம்.
இதற்கிடையில் அந்த மருத்துவமனையின் இயக்குனர் குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் அந்த குழந்தை மருத்துவமனையின் கஸ்டடியில் இருந்தபோது தேவையான மருந்துகளையோ, உணவுகளையோ சரிவரத் தரவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
பொருளாதார உலகின் அரக்க இதயம்!
Source: BBC News / Msn
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.