மல்லிப்பட்டினம், பிப்.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள மல்லிப்பட்டிணத்தில் கட்டப்பட்டு வரும் மீன்பிடி துறைமுகத்தினை நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மல்லிப்பட்டிணத்தில் கடலோர பேரழிவு இன்னல் நீக்கும் திட்டத்தின் கீழ் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி துறைமுகத்தை நவீனப்படுத்தி மறு கட்டமைப்பு வசதிகள் செய்யும் பணியில், மீன்வளத்துறை அலுவலகம், வலை உலர்களம், மீன் விற்பனை மையம், கழிவறைகள், கூடுதலாக படகு இறங்கு தளமும் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். துறைமுகம் அமையவுள்ள இடத்தினை பொது மக்களின் குடியிருப்புகளுக்கு இடுகாட்டிற்கு செல்லும் பாதையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், சுற்றுலா தலமான மனோரா பகுதியில் ஆய்வு செய்து மின் விளக்குகள் எல்.இ.டி. பல்புகள் மாற்றிடவும், 100 நாள் வேலை திட்டத்தில் மரக்கன்றுகளை நட்டும், சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்திடவும் உள்ளாட்சித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராசு, பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன், வட்டாட்சியர் ரகுராமன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.