.

Pages

Sunday, February 18, 2018

பட்டுக்கோட்டை மருத்துவமனை சீர்கேட்டைக் கண்டித்து இளைஞர்கள் ஊர்வலம் ~ ஆர்ப்பாட்டம் (படங்கள்)

பட்டுக்கோட்டை, பிப்.18
பட்டுக்கோட்டையில் அரசு மருத்துவமனை நிர்வாக சீர்கேட்டைக் கண்டித்து சமூக நல ஆர்வல இளைஞர்கள் பங்கேற்ற ஊர்வலம், ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு விதைகள் அமைப்பின் தலைவர் டி. சிதம்பரம் தலைமை வகித்தார். தமிழ்ச்சங்கச் செயலர் ந. மணிமுத்து, வழக்குரைஞர் ஏ.ஜி.மணிகண்டன், கோட்டை ரோட்டரி சங்கத் தலைவர் ஏ.ஆர்.அன்பு, நகர தமாகா தலைவர் ஏ.கே.குமார், நடிகர் விஜய் மக்கள் இயக்க ஒன்றியத் தலைவர் ஏனாதி மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, அனைவரும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையிலிருந்து தலைமை அஞ்சலகத்துக்கு ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை அரசு மருத்துவ மனையில் 24 மணி நேர அவசர சிகிச்சைப் பிரிவு தொடங்கி, ஆபத்தான நிலையில் அழைத்து வரப்படும் அனைவருக்கும் இங்கேயே சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்குத் தேவையான அனைத்து நவீன மருத்துவக் கருவிகளை அரசு உடனடியாக வழங்குவதுடன், இந்த மருத்துவ மனையில் சிறப்பு மருத்துவர்களையும் தாமதமின்றி நியமிக்க வேண்டும். மருத்துவமனை வளாகத்தில் சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய மாவட்ட சுகாதார இணை இயக்குநர் சிவசுப்பிரமணிய ஜெயசேகர் அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்ற விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இதையடுத்து ஆர்ப்பாட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.