தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டம் 2018-19ன் கீழ் பயன் பெற கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணைய தளத்தில் வருகின்ற 31-03-2018க்குள் இணைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்கள்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1 முதல் 12ஆம் வகுப்பு, வாழ்க்கை தொழிற்கல்வி (Vocational), ஐடிஐ, ஐடிசி, பாலிடெக்னிக், பட்டயப்படிப்புகள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்புகள், பொறியியல் மற்றும் மருத்துவம், எம்ஃபில், ஆராய்ச்சிப்படிப்பு ஆகியவற்றை பயிலும் கிறித்துவர் - இஸ்லாமியர் - புத்தமதத்தினர் - சீக்கியர் - ஜைன் மற்றும் பார்சி மதத்தைச் சார்ந்த சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு. பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசிய கல்வி உதவித்தொகை இணையம் (National Scholarship Portal) www.scholarships.gov.in வாயிலாக மத்திய அரசின் மு்லம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இக்கல்வி உதவித்தொகை திட்டத்தில் பயன்பெற அனைத்து கல்வி நிலையங்களும் மேற்காஹணும் இணைய தளத்தில் பதிவு செய்திருப்பது அவசியமாகும், எனவே. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு. அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் பதிவு செய்துள்ளதையும், பயனீட்டாளர் குறியீடு (USER ID) பெறப்பட்டுள்ளதையும் உறுதி செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. AISHE / UDISE எண் மற்றும் கல்வி நிலையத்தின் பெயர் ஒன்றுக்கொன்று முரணாக இருப்பின் அவ்விவரத்தினை உரிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
AISHE எண் பெறாத கல்லுரிக் கல்வி நிறுவனங்கள் மத்திய அரசின் www.aishe.nic.in என்ற இணைய தளத்தில் ஆன்லைன் மு்லம் பதிவு செய்து பெறலாம் எனவும். பள்ளிகளை பொறுத்தவரை UDISE எண்ணிற்கு முதன்மைக் கல்வி அலுவலரை அணுகுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது,
இணையத்தில் கல்வி நிறுவனத்தினை பதிவு செய்வது தொடர்பாக கல்வி நிலைய முதல்வர் - தலைமையாசிரியர் - டீன் கோரிக்கை கடிதம். (சுய ஒப்பமிட்டது). தலைமையாசிரியர் - முதல்வர் - டீன் பெயர். மொபைல் எண் (அவசியம்). AISHE / UDISE எண். கல்வி நிலையத்தின் முழு முகவரி மற்றும் இதர விவரங்களுடன் (கோரப்படும் பட்சத்தில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை உடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கல்வி நிலையங்களை தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் ( www.scholarships.gov.in ) பதிவு செய்வதற்கான கடைசி தேதி 31-03-2018 எனவும், 31-03-2018 வரை இணையதளத்தில் பதிவு செய்துள்ள கல்வி நிலையங்கள் மட்டுமே 2018-19 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற இயலும் எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ,அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.