.

Pages

Tuesday, February 20, 2018

SSLC, +1, +2 பொதுத் தேர்வுகள் முன்னேற்பாடு பணிகள் தேர்வுக்குழு கூட்டம்!

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் மேல்நிலை  11ம் வகுப்பு, 12ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள்  தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வுக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் தேர்வுக் குழு கூட்டம் இன்று (20.02.2018) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
வருகின்ற மார்ச் மாதம் மேல் நிலை 11ம் வகுப்புக்கு 07.03.2018 முதல் 16.04.2018 வரையிலும், 12ம் வகுப்புக்கு 01.03.2018 முதல் 06.04.2018 வரையிலும், பத்தாம் வகுப்பிற்கு 16.03.2018 முதல் 20.04.2018 வரையிலும் அரசு பொதுத் தேர்வுகள் நடைபெறவுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் முதலாம் ஆண்டு மேல் நிலை அரசு பொதுத் தேர்வு 217 பள்ளிகளைச் சேர்ந்த 13,150 மாணவர்களும், 16,435 மாணவிகளும் ஆக கூடுதல் 29,585 மாணவ மாணவியர்களும், இரண்டாம் ;ஆண்டு அரசு மேல்நிலை பொதுத் தேர்வு 212 பள்ளிகளைச் சேர்ந்த 13,267 மாணவர்களும், 16,235 மாணவிகளும் ஆக கூடுதல் 29,502 மாணவ மாணவியர்களும், பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வினை 401 பள்ளிகளைச் சேர்ந்த 17,031 மாணவர்களும், 16,891 மாணவிகளும் ஆக கூடுதல் 33,922 மாணவ மாணவியர்களும் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மையங்களுக்குள் செல்போன் அனுமதி இல்லை.

நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மேல்நிலை மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்களுக்கு போதிய பாதுகாப்பு வசதியினையும், வினாத் தாள் கட்டுப்பாட்டு மையங்களுக்கு 24 மணி ஆயுதம் ஏந்திய காவலர்கள் நியமித்திடத்திடவும், தேர்வு நடைபெறும் நாட்கள் மட்டுமல்லாது தேர்வு இல்லாத நாட்களிலும் காவலர்கள் வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களில் பணிபுரிய  காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.  அனைத்து வினாத்தாள் கட்டுப்பாட்டு மையங்களுக்கு, தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

அனைத்து தேர்வு மையங்களுக்கும் போதுமான தங்கு தடையின்றி மின்சார வசதிகள், குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி போன்றவை ஏற்படுத்திட ,தொடர்புடைய பள்ளிக் கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, போக்குவரத்துத் துறை, மின்சாரத்துறை உரிய  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இக்கூட்டத்தில்  கும்பகோணம் சார் ஆட்சியர் திரு.பிரதீப் குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.செந்தாமரை மற்றும் அனைத்துத் துறை  அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.