.

Pages

Wednesday, February 21, 2018

பைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஏர் அரேபியா!

அதிரை நியூஸ்: பிப்.21
பைலட் ஆக ஆசைப்பட்ட 11 வயது இமராத்தி சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய ஏர் அரேபியா

2018 ஆம் வருடத்தை அமீரக நிறுவனர் மறைந்த மன்னர் ஷேக் ஜாயித் ஆண்டாக கொண்டாடி வருகிறது அமீரகம் (The Year of Shaikh Zayed). நடப்பு ஷேக் ஜாயித் ஆண்டை சிறப்பிக்கும் வகையில் ஜாயித் என்ற பெயர் கொண்ட 11 வயது அனாதை அமீரகச் சிறுவனின் விமான பைலட் கனவை நிறைவேற்றியுள்ளது ஷார்ஜாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஏர் அரேபியா விமான நிறுவனம்.

ஏர் அரேபியா தலைமையகத்தில் முன்பதாக சிமுலேட்டரில் பயிற்சியளிக்கப்பட்டு தற்காலிக லைசென்ஸ் ஒன்றும் வழங்கப்பட்டதை தொடர்ந்து ஷார்ஜா விமான நிலையத்தில் பைலட் உடையுடன் விமான கேப்டன் ஒருவருடன் ஏர் அரேபியா விமான ஒன்றின் காக்பிட் உள்ளே அனுமதிக்கப்பட்டார். அங்கு சிறுவன் ஜாயிதுக்கு விமானம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்து செயல்முறை பயிற்சியளிக்கப்பட்டு அவனது ஆசை நிறைவேற்றப்பட்டது.

இறுதியாக அச்சிறுவனுக்கு உம்ரா சென்று வருவதற்கான இலவச டிக்கெட் ஒன்றையும் வழங்கியதுடன் 'இளம் மொட்டுக்கள் பைலட்' திட்டத்தின் உறுப்பினராகவும் (A member of the pilot buds programme) இணைத்துக் கொள்ளப்பட்டார் இதன் மூலம் அச்சிறுவன் விரும்பியவாறு பின்னாளில் பயிற்சி பெற்று நிஜ பைலட் ஆகி வானில் பறக்கலாம்.

இந்நிகழ்ச்சியை ஏர் அரேபியா நிறுவனம் (Air Arabia), ஷார்ஜா விமான நிலைய நிர்வாகம் (Sharjah Airport Authority), ஷார்ஜா மனவலிமை ஆலோசணை மையம் The Sharjah Consultative Council மற்றும் ஷார்ஜா மேம்பாட்டு அறக்கட்டளை (Sharjah Social Empowerment Foundation) ஆகியவை இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.