.

Pages

Wednesday, February 28, 2018

அதிரை அரசு மருத்துவனையில் டாக்டர் ஹாஜா முகைதீனுக்கு பணி நிறைவு பாராட்டு விழா (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.28
அரசு மருத்துவராக கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வந்தவர் டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன். இவர், இன்று (பிப்.28) புதன்கிழமை  அரசு மருத்துவப் பணியில் இருந்து ஓய்வு பெற்றதை அடுத்து, இவரது மருத்துவச் சேவையைப் பாராட்டி, பணி நிறைவு பாராட்டு மற்றும் வழியனுப்பும் விழா அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

விழாவிற்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ஏ.அன்பழகன் தலைமை வகித்து வாழ்த்திப் பேசினார்.

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் டாக்டர் கெளசல்யா, டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் சுதாகர், டாக்டர் ஷெரீன், மருத்துவமனை பணியாளர்கள் சீதா, ராஜேஸ்வரி, ராஜலெட்சுமி, ஜெயபாரதி, வினோதகன், பன்னீர் மற்றும் சமூக ஆர்வலர் எம்.நிஜாமுதீன் உள்ளிட்ட பலர் வாழ்த்துரை வழங்கினார்கள். முடிவில், டாக்டர். எஸ். ஹாஜா முகைதீன் ஏற்புரை வழங்கினார். இவ்விழாவில், அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பணியாளர்கள், ஊழியர்கள், ஊர் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.