.

Pages

Wednesday, February 14, 2018

வல்லத்தில் ஜல்லிக்கட்டு !

தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பேரூராட்சி மேட்டுத்தெருவில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் கொடியசைத்து இன்று (14.02.2018) துவக்கி வைத்தனர்.

முன்னதாக காளை பிடி வீரர்களுடன் ஜல்லிக்கட்டு உறுதிமொழியினை ஏற்று   ஜல்லிகட்டு நிகழ்ச்சியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் உறுதி மொழியினை ஏற்றனர்.

தமிழர்களின் பாரம்பரியான விளையாட்டான ஜல்லிக்கட்டு விழாவில் 546 காளைகள், பதிவு செய்யப்பட்டதில் ஜல்லிக்கட்டு காளையினை முறையாக கால்நடைத்துறை மூலம் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு தகுதியுடைய காளைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. 36 காளைகள் தகுதியின்மையில் காரணமாக நிராகரிக்கப்பட்டது. கால்நடைத்துறையின் மூலம் காளைகளுக்கு தனியாக ஆம்புலென்ஸ் வசதி தயார் நிலையில் இருந்தது.  250 காளை பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர். வீரர்களுக்கு மருத்துவத் துறையின் மூலம் முறையான பரிசோதனை செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டனர். 31 வீரர்கள் தகுதியின்மை காரணமாக நிராகரிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டு போட்டியில் 3 காளைகளுக்கு காயமும், 8 மாடு பிடி வீரர்களுக்கு லேசான காயமும் ஏற்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதுகாப்பு பணிகளில் காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். மேலும், உச்ச நீதி மன்ற வழிகாட்டுதலின்படி அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

இவ்விழாவில் தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, மதுரை ஆகிய மாவட்டங்களிலிருந்து காளை மாடுகள் கொண்டு வரப்பட்டிருந்தன.  கால்நடைத் துறை இணை இயக்குநர் அவர்களின் தலைமையில் ஒரு துணை இயக்குநர்,  6 உதவி இயக்குநர்கள், 12 கால்நடை மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் காளைகள் பரிசோதனை மேற்கொண்டனர்.

சுகாதாரத்துறையின் சார்பில் சுகாதாரபணிகள் துணை இயக்குநர் அவர்கள் தலைமையில் 12 குழுக்களில் 12 மருத்துவர்கள், 12 செவிலியர் மற்றும் 15 உதவியாளர்கள் கலந்து கொண்டு மாடி பிடி வீரர்களுக்கு ஏற்பட்ட காயங்கள் மருத்துவ சிகிச்சை அளித்தனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார்,  வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், கால்நடைத்துறையின் இணை இயக்குநர் மாசிலாமணி, சுகாதாரப் பணிகளின் துணை இயக்குநர் டாக்டர் சுப்ரமணியன், வட்டாட்சியர் தங்கபிரபாகரன் மற்றும்  விழாக்குழுவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.