அதிரை நியூஸ்: பிப்.15
டாலர் இல்லாமல் திர்ஹம் மற்றும் ரூபாய்களை கொண்டு நேரடி வர்த்தக ஒப்பந்தம்.
உலகின் பெரும்பாலான நாடுகளின் வர்த்தகங்கள் அமெரிக்க டாலரை அடிப்படையாக கொண்டே நடைபெறுகின்றன. மேலும் யூரோ, இங்கிலாந்து பவுண்டு, ஜப்பானிய யென், சீன யுவான் போன்ற பணங்களும் ஓரளவு பயன்படுத்தப்படுகிறது. இந்திய பணத்தைப் பொருத்தவரை அதன் தொடர் வீழ்ச்சியால் சீண்டுவார் யாருமில்லை மேலும் வெளிநாடுகளில் செயல்படும் மணி எக்ஸேஞ்சுகள் கூட பெரும்பாலும் இந்திய பணத்தை வாங்குவதில்லை.
மேலும் அமெரிக்க டாலருக்கு பதிலாக அந்தந்த நாட்டு கரன்ஸிகளின் அடிப்படையில் வர்த்தகம் செய்ய முன்வந்த ஈராக், வெனிசூலா போன்ற நாடுகள் அடைந்த கதி எல்லோருக்கும் தெரிந்தது தான். இதற்கு முன் ஈரான் இந்தியாவுடன் ரூபாயில் வர்த்தகம் செய்த கொண்டுள்ள நிலையில் தற்போது அமீரகமும் இந்தியாவுடன் 'திர்ஹம் - ரூபாய்' அடிப்படையில் வர்த்தகம் செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
டாலரை தவிர்த்துவிட்டு நேரடியாக இருநாட்டு பணங்களின் அடிப்படையில் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் செய்வதன் மூலம் டாலர் மாற்றங்களுக்காக வர்த்தகர்கள் செலவிடும் தொகை மிச்சமாகும். அமீரகத்தில் டாலர் மதிப்பு ஸ்திரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் அது சந்தை நிலவரத்திற்கு ஏற்ப பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது.
1982 ஆம் ஆண்டு சுமார் 182 பில்லியனாக இருந்த அமீரக இந்திய வர்த்தகம் தற்போது 53 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம் அங்கு நிதி தொடர்புடைய பல விலை ஏற்றங்களுக்கு திட்டமிட்டு வரும் நிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Wam / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.