அதிரை நியூஸ்: பிப்.15
டிரம்ப்பின் இமிக்கிரேசன் சட்டத்தால் நாடு கடத்தப்பட்டு சொந்த நாட்டுக்கு திரும்பியவருக்கு நடுவானில் சட்டம் ரத்து.
30 வருடங்களுக்கு முன் அமெரிக்காவில் குடியேறி 3 அமெரிக்க குடியுரிமை பெற்ற குழந்தைகளின் தந்தையாகவும், அங்குள்ள ஒரு கல்வி நிலையத்தில் கெமிஸ்ட்ரி ஆசிரியராகவும் பணிபுரிந்து வந்தவர் சையது அஹமது ஜமால் என்கிற 55 வயது பங்களாதேஷ் நாட்டுக்காரர்.
அவரது 2 வது வாழ்விட அமெரிக்கா விசா 2011 ஆம் ஆண்டு காலாவதிவிட்டது என்பதுடன் அதைப் புதுப்பிக்க எடுத்த அனைத்து முயற்சிகளின் போது அமெரிக்கா அதிகாரிகளின் சுறுசுறுப்பை ஆமையே ஜெயித்தது என்றாலும் சட்டத்தால் அவர் அங்கு தொடர்ந்து ஒரு ஊழியராக தங்கியிருக்கவும் வேலைபார்க்கவும் அனுமதி பெற்றிருந்தார். இந்நிலையில் தனது குழந்தையை பள்ளிக்கூடத்தில் கொண்டு விடுவதற்காக சென்றவரை 'லபக்' என பாய்ந்த பிடித்த அதிகாரிகள் நீதிமன்றத்தில் நிறுத்தினர்.
டிரம்ப்பின் சட்டத்தை மேற்கோள்காட்டிய நீதிபதியும் உடனடியாக சையது அஹமது ஜமாலை நாட்டைவிட்டு வெளியேற்றும்படி உத்தரவிட பொறுப்புடன் பங்களாதேஷ் செல்லும் விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சையது அஹமது ஜமாலின் வழக்கறிஞர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தவர் என சட்ட போராட்டம் நடத்தியதன் விளைவாக பங்களாதேஷிற்கு பறந்து கொண்டிருந்தவரின் விமான திருப்பப்பட்டு ஹவாய் தீவின் ஹோனொலூலூவில் அமைந்துள்ள அமெரிக்க தடுப்பு முகாமில் அடுத்த உத்தரவை எதிர்பார்த்து நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். விமான இவரில்லாமல் பங்களாதேஷ் சென்றும் விட்டது.
இதற்கிடையில், சையது அஹமதிற்கு ஆதரவாக நடத்தப்பட்ட ஆர்ப்பட்டம் ஒன்றில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டதுடன் சுமார் 70,000 டாலர்களையும் வழக்கு செலவிற்காக வாரி வழங்கியுள்ளனர். மேலும் சுமார் 1 லட்சம் பேர் சையது அஹமதிற்கு ஆதரவாக கையெழுத்திட்டுள்ளனர். இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அவரது தம்பி சையது ஹூசைன் பேசும் போது, இச்சட்டத்தின் மூலம் கொடிய குற்றவாளிகள் மட்டுமே குறிவைக்கப்படுவார்கள் என டிரம்ப் தந்த வாக்குறுதிக்கு மாற்றமாக அமெரிக்க குடியுரிமை பெற்ற ஒரு குடும்பத்தின் தலைவராக, தந்தையாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களை இருகூறுகளாக கிழித்து எறிவது ஏன் என கேள்வி எழுப்பினார்.
Source: AFP / Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.