அதிராம்பட்டினம், பிப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினதிற்கு வருகை தந்த ஆந்திரா மாநிலம் கடப்பா தொகுதி எம்.எல்.ஏ எஸ்.பி அம்ஜத் பாஷாக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆந்திரா மாநிலம் ஓய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கடப்பா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் எஸ்.பி அம்ஜத் பாஷா. இவரது உறவினர் அப்துல்ரஹ்மான் கடந்த 40 ஆண்டுகள் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் நூலகராக பணியாற்றியவர்.
இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு அதிராம்பட்டினம் வருகை தந்தார். அதிராம்பட்டினத்தின் முக்கியப் பகுதிகளுக்கு சென்று நண்பர்கள் மற்றும் முக்கிய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டனர்.
விருந்தினராக வருகைதந்த எம்.எல்.ஏ எஸ்.பி அம்ஜத் பாஷாக்கு அதிராம்பட்டினம் பேரூர் முன்னாள் சேர்மன் எஸ்.எச் அஸ்லம் சார்பில், சால்வை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் நிர்வாக டிரஸ்ட் தலைவர் கே.எஸ் சுக்கூர், தலைமை இமாம் மவ்லவி. தமீம், சம்சுல் இஸ்லாம் சங்கத் தலைவர் ஹாஜி அபூபக்கர், முன்னாள் கவுன்சிலர்கள் 'நூர்லாட்ஜ்' செய்யது முகமது, முகமது சரீப், சமூக ஆர்வலர்கள் ஏ.சாகுல் ஹமீது, பதர்சான், சுலைமான், அன்சாரி மற்றும் அதிராம்பட்டினம் பிரமுகர்கள் சார்பில் சால்வைகள் அணிவித்து வரவேற்பு அளித்தனர்.
வருகை குறித்து எம்.எல்.ஏ எஸ்.பி அம்ஜத் பாஷா கூறியது;
அதிராம்பட்டினத்திற்கும் எங்களது குடும்பத்திற்கு நெருங்கிய தொடர்பு உண்டு. இப்பகுதி பொதுமக்கள் அளவுகடந்த அன்பைப் பொழிவார்கள், பாசத்தோடு தோழமை கொள்வார்கள். பல்வேறு காலக்கட்டங்களில் நமக்கு உதவி இருக்கிறார்கள். இந்த ஊரோடும், இங்குள்ள மக்களோடும் நல்ல தொடர்பை எப்போதும் தொடர வேண்டும் என, காதிர் முகைதீன் கல்லூரியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நூலகாரகப் பணியாற்றிய மறைந்த எங்கள் மாமா அல்ஹாஜ் அப்துல் ரஹ்மான் அவர்கள் எங்களிடம் அடிக்கடி கூறுவார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிராம்பட்டினம் வருகை தந்து நண்பர்களை சந்தித்து வருகிறோம். இங்குள்ள பள்ளிவாசல்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்று வருகிறோம். சிறப்பான வரவேற்பும் - உபசரிப்பும் அளித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு எங்களது குடும்பத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்' என்றார்.
அப்போது, நூலகர் அப்துல் ரஹ்மான் அவர்களின் மகன்கள் ஜூக்கா, சமீயூர் ரஹ்மான் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.