.

Pages

Thursday, February 22, 2018

ஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட்பட பல புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு (படங்கள், வீடியோ)

அதிரை நியூஸ்: பிப்.22
ஆஸ்திரேலிய ஆழ்கடலில் 'உலகின் அசிங்கமான மிருகம்' உட்பட பல புதிய வகை உயிரினங்கள் கண்டுபிடிப்பு (படங்கள், வீடியோ)

ஆஸ்திரேலியாவின் 'அபீஸ்' (Abyss) என்றழைக்கப்படும் கடற் பள்ளத்தாக்குகளில் வாழும் உயிரினங்கள் பற்றி ஆராய்வதற்காக விஞ்ஞானிகள் அடங்கிய குழு ஒன்று டாஸ்மானியாவில் இருந்து புறப்பட்டு ஒரு மாத காலம் கப்பலிலேயே தங்கியிருந்து கடல் அடியில் சுமார் 4.8 கி.மீ ஆழத்தில் வாழும் சுமார் 42,747 எண்ணிக்கையிலான அரிய பல கடல்வாழ் உயிரினங்கள் சேகரித்து ஹோபார்ட் துறைமுகத்தை வந்தடைந்தனர். அவற்றில் சுமார் 5 உயிரினங்கள் தற்போது தான் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

உலகில் இதுவரை சுமார் 300 விஞ்ஞானிகளின் ஆய்வுகளின் அடிப்படையில் 242,500 கடல்வாழ் உயிரினங்களே இதுவரை அதிகாரபூர்வமாக கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்கிற நிலையில் ஆழ்கடல் பகுதியில் மிக மிக உயர் அழுத்தமும், இருளும், குளிரும், உணவுப்பற்றாக்குறையும் நிலவும் பகுதிகளில் வாழும் இப்புதிய கடல்வாழ் உயிரினங்கள் பற்றிய கண்டுபிடிப்புகள் புதிய ஆய்விற்கு வழி திறந்துவிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

2003 ஆம் ஆண்டு  நியூஸிலாந்து கடலில் நடைபெற்ற ஆய்வில்  'வழ வழ கொழ கொழ' என தென்படும் ஒரு கருப்பு மீன் இனத்தை மிஸ்டர். பிளாபி (Mr. Blobby) என்கிற விஞ்ஞானி கண்டுபிடித்திருந்தார். அந்த மீனுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது. 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒட்டெடுப்பு ஒன்றின் மூலம் மிஸ்டர். பிளாபி மீனே உலகின் மிகவும் அசிங்கமான தோற்றமுடைய மிருகம் “world’s ugliest animal” — Mr. Blobby  என தேர்வு செய்யப்பட்டிருந்தது.

அந்த மிஸ்டர். பிளாபி மீனின் தோற்றத்தில் காணப்படும் இன்னொரு வகை புதிய மீனும் இந்த ஆழ்கடல் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இதற்கு 'உலகின் அசிங்கமான தோற்றமுடைய மிருகத்தின்' ஒன்றுவிட்ட சகோதரர் / உறவினர் என விஞ்ஞானிகள் அழைக்கின்றனர் (Kin of ‘world’s ugliest animal’ hauled from Australia abyss).

மேலும் முகமில்லாத மீன் (Faceless) ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இந்த மீன் 1873 ஆம் ஆண்டு பப்புவா நியூ கினியா கடற்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு குறிப்பு மட்டுமே இருக்கும் நிலையில் தற்போது விஞ்ஞானிகளிடம் பிடிபட்டுள்ளது. ஈல் எனப்படும் விலாங்கு மீன் வகையில் ஒன்றான 'வாத்து வாய் ஈல்' மீன் (Duckbill eel) ஒன்றும், கூரான பற்களை உடைய பல்லி மீன் (Lizard Fish) மற்றும் ரேசர் வாய் சுறா (Razor teethed shark), கேமரா ஸ்டான்டு போன்ற தோற்றமுடைய மீன் (Tripod fish) ஆகியன புதிய உயிரினங்களாக அடையாளங் காணப்பட்டுள்ளன.

வீடியோ: https://www.youtube.com/watch?v=4bp1hLeEIoM

 
 

Sources: NDTV / Daily Mail / Japan Times / Emirates 247 etc.
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.