அதிரை நியூஸ்: பிப்.26
சவுதியில் கெட்டுப்போன மருந்து, உணவுப் பொருட்கள் குறித்து புகார் தர ஒருங்கிணைந்த தொலைபேசி எண்
சவுதியில் விற்கப்படும் மருந்து, மருத்துவ உபகரணங்கள், அழகு சாதனப் பொருட்கள், தீவனம் மற்றும் பூச்சு கொல்லிகள் குறித்து சந்தேகங்களை விசாரித்து அறிந்து கொள்ளவும், அதில் காணப்படும் குறைகள் குறித்து புகார் தரவும் 19999 என்கிற ஒருங்கிணைந்த தொலைபேசி எண்ணை அறிமுகப்படுத்தியுள்ளது சவுதியின் மருந்து மற்றும் உணவிற்கான ஆணையம். (The Saudi Food and Drug Authority - SFDA)
மேலும் உடல் நலத்திற்காக விற்கப்படும் மூலிகை அடிப்படையிலான மருந்துப் பொருட்கள், அனுமதி பெறாத மற்றும் தரம் குறைந்த அழகு சாதனப் பொருட்கள், மருந்துகள், குழந்தைகளுக்கான பால் உணவுகள் போன்றவற்றின் சுவை, மணம், நிறம் மாறியிருந்தாலும் மேற்காணும் எண்ணில் அழைத்து புகார் தெரிவிக்கலாம்.
அதேபோல் அனுமதி பெற்ற மருந்து மற்றும் உணவுப் பொருட்கள் பாவணையின் மூலம் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட்டாலும் தகுந்த எச்சரிக்கைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு விடுக்கப்படும், மருந்து மற்றும் உணவுப் பொருட்களை சுகாதாரமான, பாதுகாப்பான முறையில் சேமித்து வைக்கத் தவறினாலும் அல்லது தரமற்ற அனுமதியற்ற பொருட்களை அதனுள் சேமித்து வைத்திருந்தாலும் தண்டிக்கப்படுவர். சுவை மாறிய அல்லது போக்குவரத்தின் போது சூரிய வெப்பத்தால் சூடான குடிநீரை விற்பவர்களைப் பற்றியும் புகார் தெரிவிக்கலாம்.
மேற்காணும் தொலைபேசி எண்ணை அழைத்து கருத்துக்களை பெற்றுக் கொள்வது அல்லது புகார் தருவதன் மூலம் விற்கப்படும் உணவுப் பொருட்களின் தரம், மருந்து மற்றும் மருத்துவ சாதனங்களின் திறன் மற்றும் தரங்களை துல்லியமாக உத்திரவாதப்படுத்த இயலும்.
மேலும் சவுதியின் உணவு மற்றும் மருந்துகளுக்கான ஆணையம் (SFDA) வழங்கியுள்ள விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை பதிவுகள், அனுமதி பெற்ற உணவுப் பொருட்களின் பட்டியல், பதிவுபெற்ற பாட்டில் தண்ணீர் குறித்த விபரங்கள், மருந்துகள், மூலிகைப் பொருட்கள், கால்நடைகளுக்கான தயாரிப்புக்கள், அழகு சாதனப் பொருட்கள், வைட்டமின் தயாரிப்புக்கள், மருத்துவ உபகரணங்கள் பற்றியும் அதன் விலைகள் மற்றும் கிடைக்குமிடங்கள் குறித்த விபரங்களை அறிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட ஒருங்கிணைந்த தொலைபேசி எண்ணில் சவுதியர்கள் மற்றும் சவுதி வாழ் வெளிநாட்டினர் என அனைவரும் சனி முதல் வியாழன் வரை காலை 8 மணிமுதல் இரவு 10 மணிவரையும், வெள்ளிக்கழமைகளில் மாலை 2 மணிமுதல் இரவு 10 மணிவரையும் அழைத்து புகார் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ளலாம். வேலை நேரத்தில் அழைக்க முடியாதவர்கள் உங்களுடைய அழைப்பை பதிவு செய்தும் வைக்கலாம். இந்த சேவை அரபி மற்றும் ஆங்கிலத்தில் வழங்கப்படுகின்றன.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.