.

Pages

Wednesday, February 14, 2018

சிமெண்ட் டேங்கர் லாரிக்குள் ஒழிந்து கொண்டு ஓமனிலிருந்து அமீரகத்திற்குள் ஊடுருவ முயன்ற 22 பேர் கைது!

அதிரை நியூஸ்: பிப்.14
ஓமனையும் அமீரகத்தையும் இணைக்கும் தரைவழிச்சாலைகளில் ஒன்று காத்தம்-மலீஹா பார்டர் இமிக்கிரேசன் மற்றும் கஸ்டம்ஸ் சோதனைச்சாவடி (Khatam-Maliha border in Kalba, Sharjah). ஷார்ஜா எமிரேட்டுக்குட்பட்ட கல்பா நகரில் 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுகிறது.

காத்தம்-மலீஹா சோதனைச்சாவடி வழியாக ஓமனிலிருந்து அமீரகத்திற்குள் வந்த ஒரு சிமெண்ட் லாரி டேங்கருக்குள் 21 ஆசிய நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் 1 ஆப்பிரிக்கப் பெண் என 22 பேர் மறைத்து வைக்கப்பட்டு சட்டவிரோதமாக ஊடுருவினர். இந்த சிமெண்ட் டேங்கர் டிரக்கை ஓட்டி வந்தவரும் ஒரு ஆசிய நாட்டவரே.

எல்லையில் நிறுவப்பட்டுள்ள அதிசக்கிவாய்ந்த எக்ஸ்ரே ஸ்கேனர் வழியாக ஆட்கள் டேங்கருக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த அதிகாரிகள் அவர்களை கல்பா போலீஸ் உதவியுடன் ஒவ்வொருவராக வெளியேற்றி கைது செய்து மேல் நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். (A high-tech X-ray scanner that can "see" helped the authorities foil the attempted human smuggling).

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.