.

Pages

Friday, February 23, 2018

பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் அறிவியல் கோளரங்கம் ~ டெலஸ்கோப் விண்வெளி கண்காட்சி!

அதிராம்பட்டினம், பிப்.23
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர்  பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப கழகத்தின் நடமாடும் அறிவியல் கோளரங்க வாகனம் மூலம் சிறப்பு கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், இன்று வெள்ளிக்கிழமை இரவு 6 மணி முதல் 10 மணி வரை டெலஸ்கோப் மூலம் சந்திரன், நட்சத்திரங்கள் மற்றும் விண்வெளியை துல்லியமாகக் காண்பதற்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், இன்று (பிப்.23), வெள்ளிக்கிழமை, நாளை (பிப்.24) சனிக்கிழமை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவ, மாணவிகளின் 100 க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள், கணினி அறிவியல் தொழில்நுட்பம், நாசா விண்வெளி சுற்றுலா மாணவர்களின் நாசா விண்வெளி புகைப்படங்கள், ஒளித்திரை கண்காட்சி ஆகியவை இடம்பெற உள்ளது.

இதில், அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடைய பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது. 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.