அதிராம்பட்டினம், பிப்.26
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாழும் மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோர் நலச் சங்க 8 ஆம் ஆண்டு தொடக்க விழா சங்க அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.
விழாவிற்கு நலச்சங்கத் தலைவர் எஸ்.எம்.ஒய் ஹாஜா சரீப் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஏ.சிராஜுதீன், பொதுச்செயலாளர் எஸ்.ஏ நூருல் அமீன், இணைச்செயலாளர் உமர் தம்பி, பொருளாளர் ஆர்.மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக சமூக ஆர்வலர் எம். நிஜாமுதீன் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார். விழாவில், மாற்றுத்திறனாளிகள் பேச இயலாத - காது கேளாதோருக்கு இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும், நலச்சங்க ஏழை எளிய உறுப்பினர்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க அரசை வலியுறுத்துவது, விடுபட்ட நல அறக்கட்டளை உறுப்பினர்களுக்கு அரசின் மாதாந்திர உதவித்தொகை வழங்க அரசை கேட்டுக்கொள்வது, தொழிற்கடன் வழங்க அரசு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த விழாவில் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த நலச் சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.