அதிரை நியூஸ்: பிப்.21
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் இருந்து 1992 ஆம் ஆண்டு சயீத் சையத் மஹபூப் சாப் என்கிற 40 வயதுடைய 4 பெண் குழந்தைகளின் தந்தை சவுதி அரேபியாவிற்கு பிழைப்பைப் தேடிச் செல்கின்றார். அப்போது அவரது கடைசி பெண் குழந்தையின் வயது 3 தற்போது 28 வயது பெண்ணாக திருமணம் நடைபெறாமல் உள்ளார்.
தெற்கு ஆசிய நாடுகள் பலவற்றில் சமூக நோயாக பீடித்திருக்கும் வரதட்சணை என்னும் கொடிய நோயே எண்ணற்றோர் சவுதி உட்பட பல வளைகுடா நாடுகளை நோக்கி ஓட காரணமாக இருக்கின்றது. இவர்களில் ஒருவராக சவுதி வந்த மஹபூப் சாப் பகலில் கட்டுமான தொழிலாளியாகவும் இரவில் டைலராகவும் பணியாற்றி சிறுகச்சிறுக சேர்த்த பணத்தை கொண்டு 2 மகள்களுக்கு திருமணம் முடித்துவிட்டார் இன்னும் 2 பேர் எஞ்சியுள்ளனர்.
வரதட்சணை என்னும் பிச்சையை மணமகனுக்கு போடுவதற்காக உழைத்த உழைப்பில் 25 ஆண்டுகள் கரைந்தே போய்விட்டன. காலாவதியான விசா மற்றும் பாஸ்போர்ட் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படவேயில்லை, சட்ட விரோத தங்குதலுக்கு எதிராக சவுதியின் தண்டனைகள் கடுமையான நிலையிலும் சட்டத்திற்கு புறம்பாகவே தங்கியிருந்துள்ளார்,
பொதுமன்னிப்பு வாய்ப்புக்களைக் கூட பயன்படுத்தப்பட முன்வரவேயில்லை மஹபூப் சாப். ஆரம்பத்தில் பல ஆண்டுகள் ரியாத் நகரில் பணியாற்றி வந்தவர் பின்பு தம்மாம். தன் குடும்பத்துடன் போன் மூலம் மட்டுமே பல்லாண்டுகளாக தொடர்பு கொண்டு வந்த மஹபூப் சாபிற்கு டெக்னாலஜி வளர்ச்சியின் உதவியால் தற்போது முகம் பார்த்து பேசுவதில் ஒரளவு முகத்தில் நிம்மதி தெரிகிறது.
இதுவரை தனக்கென்று ஒரு சொந்த வீடு இல்லையே என்ற கவலை ஒருபுறம் இருந்தாலும் தன் குழந்தைகளை படிக்க வைத்துள்ளதையே அவர்களுக்கு தான் வழங்கிய பெரும் சொத்தாக கருதுகிறார்.
28 வயது இளைய மகள் 'நன்றாக கவனிக்கவும்' வரதட்சணை பிரச்சனையால் இன்னும் திருமணமாகாத இளைய மகளின் தொடர் வற்புறுத்தலின் காரணமாகவே தனது 65 ஆவது வயதில் நாடு திரும்பும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் என்றாலும் அதிலும் ஒரு பிரச்சனை, தற்போது சவுதியின் குடியேற்றத்துறையின் வேலைகள் அனைத்து பயோமெட்ரிக் எனும் நவீன தொழிற்நுட்பத்துக்கு மாறிவிட்ட நிலையில் 25 ஆண்டுகளுக்கு முன் உள்ளே வந்தவருக்கு வெளியேற முடியாமல் ஏகப்பட்ட பிரச்சனைகளாம். இதிலிருந்து அவரை மீட்டு ஊருக்கு அனுப்ப சமூக சேவகர் நாஸ் சவுகத் அலி என்பவர் உதவி வருகின்றார்.
சயீத் சையத் மஹபூப் சாப் போல் எத்தனையோ தந்தைமார்கள் இன்னும் வரதட்சணை எனும் பேயால் பீடிக்கப்பட்டுள்ளனர். பலர் நாடு திரும்ப முடியாமல் அங்கே மரணமடைந்தும் உள்ளனர். வரதட்சணை வாங்கித் திருமணம் செய்யும் மணமகன்களே அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தினரின் வற்புறுத்தலுக்கு கட்டுப்பட்டு ஒரு பெரும் பாவத்திற்கு துணை போகாதீர், உங்கள் குடும்பத்தினருக்கு வரதட்சணையின் கொடுமைகளையும் அதனால் மறுமையில் அடையப்போகும் தண்டனையையும் இழிவையும் எடுத்துக்கூறி தவிர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறோம்.
Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.