அதிராம்பட்டினம், பிப்.26
அதிராம்பட்டினம் அடுத்த புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளியில் 2ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி மற்றும் கணினி அறிவியல் துறையின் கிரிசாளிசிஸ் விழா கொண்டாடப்பட்டது. பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் ஆர். ஈஸ்வரன் வரவேற்றார். அறிவியல் கண்காட்சியை தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய இயக்குநர் டாக்டர் அய்யம்பெருமாள் துவக்கி வைத்தார். டாக்டர் அய்யம்பெருமாள், நெய்வேலி என்எல்சி பொது மேலாளர் துரைக்கண்ணு ஆகியோர் மாணவர்கள் கண்காட்சியில் வைத்திருந்த கண்டுபிடிப்புகளை பார்வையிட்டு பாராட்டினர்.
மேலும் தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தின் நடமாடும் அறிவியல் கோளரங்க வாகனம் மற்றும் ப்ளானட்டோரியம் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. இந்த கண்காட்சியில் பாரம்பரிய உணவு திருவிழா, அனைத்து மாநிலங்களின் பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவர்கள், மகாத்மா காந்தி போல் வேடமணிந்து வந்து ராட்டினம் சுற்றிய மாணவர், மாணவர்களின் கணித கண்காட்சி வெகுவாக கவர்ந்தது.
மேலும் பள்ளியின் கடந்தாண்டு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) சென்ற மாணவர்களின் புகைப்பட கண்காட்சி இடம் பெற்றிருந்தது. ஏற்பாடுகளை பள்ளி மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் அனைத்துத்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.