அதிரை நியூஸ்: பிப்.18
சவுதியின் 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்களுக்கான அதிகரிக்கப்பட்ட புதிய வேகக்கட்டுப்பாடு அதிகரிகப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை (திங்கட்கிழமை) முதல் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி, ரியாத் - தாயிப், ரியாத் - கஸீம், மக்கா – மதீனா மற்றும் மதீனா – ஜித்தா ஆகிய 4 முக்கிய நெடுஞ்சாலைகளில் அதிகரிக்கப்பட்ட வேகத்தில் வாகனங்களை இயக்கலாம்.
மேற்காணும் 4 நெடுஞ்சாலைகளில் செல்லும் கார்கள் மணிக்கு 140 கி.மீ, பஸ்கள் 100 கி.மீ மற்றும் டிரக்குகள் 80 கி.மீ வரையும் இருபுறமும் செல்லலாம் என்றாலும் இது அனுமதி தானே தவிர கட்டாயம் இந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும் என்ற நிர்பந்தம் ஏதுமில்லை என்பதுடன் ஏற்கனவே இந்த சாலைகளில் மணிக்கு 120 கி.மீ வரை செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தது மேலும் ஒரு சில இடங்களில் மட்டும் அதிகப்பட்சம் 130 கி.மீ வரை செல்லவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
மேலும் மழை, பனி மற்றும் மேக மூட்டமாக காணப்படும் காலங்களில் இந்த உத்தரவு செல்லாது என்றும் ஓட்டுனர்கள் சூழலுக்கு ஏற்றவாறு நடந்து கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜித்தா – மக்கா, மதீனா – கஸீம், ரியாத் மற்றும் தம்மாம் செல்லும் நெடுஞ்சாலைகளுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடந்த 2017 ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் 1,864 பேர் சாலை விபத்துக்களில் சிக்கி மரணமடைந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு மிக அதிகபட்சமாக 9,031 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவுகள் தெரிவிக்கின்றன அதாவது நாள் ஒன்றுக்கு 24 பேர் சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். எனவே, 2020 ஆம் ஆண்டிற்குள் 25 சதவிகிதம் விபத்துக்களை குறைக்க சவுதி போக்குவரத்து துறையினர் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.