.

Pages

Tuesday, February 20, 2018

சவுதி ரியாத் ~ ஹாயில் இடையே தினசரி ரயில் போக்குவரத்து சேவை துவக்கம்!

அதிரை நியூஸ்: பிப்.20
எதிர்வரும் ஞாயிறு முதல் ரியாத் - ஹாயில் நகரங்களுக்கிடையே தினசரி ரயில் போக்குவரத்து சேவை துவக்கம்.

சவுதி ரயில்வே கம்பெனி என அழைக்கப்படும் SAR நிறுவனம் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி துவக்கப்பட்ட ரயில் சேவையின் ஒரு ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் ரியாத் - ஹாயில் நகரங்களுக்கிடையேயான தினசரி ரயில் சேவையை துவக்கவுள்ளது.

ரியாத்திலிருந்து காலை 9.30 மணிக்கு புறப்படும் ரயில் மஜ்மா, கஸீம் நகரங்கள் வழியாக ஹாயில் சென்றடையும். அதேபோல் ஹாயிலில் இருந்து 3.25 மணிக்கு புறப்பட்டு ரியாத் வந்தடையும்.

வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் மட்டும் ரியாத்திலிருந்து மஜ்மா, கஸீம் நகரங்களுக்கு சிறப்பு ரயில் சேவையும் இயக்கப்படும்.

இந்த ரயில் சேவைக்கான மேல் விபரங்களை அறியவும், ஆன்லைன் டிக்கெட்டிற்கும் http://www.sar.com.sa/Tickets/Timetable.aspx
என்ற இணைய தளத்திற்கு செல்லவும்.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.