.

Pages

Thursday, February 22, 2018

சவுதியில் தீ விபத்தில் தாயை இழந்து வாழும் 2 குழந்தைகள் பரிதவிப்பு!

அதிரை நியூஸ்: பிப். 22
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் நம்மளவில் ஒரு மனத்துன்பத்தை அனுபவித்து வருவோம். அந்த துன்பியல் நிகழ்வுகளை பிறருடைய துன்பத்துடன் ஒப்பிட்டால் நம்முடைய மனத்துன்பங்கள் ஒன்றுமில்லாததல் போல் தோன்றும், இதுதான் இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள இயல்பு வரமாகும். நம்முடைய புரிதல்களில் சொல்வதென்றால் 'நமக்கு செருப்பு இல்லையே என்று கவலைப்படுவதை விட கால் இல்லாதவனை விட நம்மை இறைவன் நன்றாகவே வைத்துள்ளான் என திருப்தியாக உணர்வது போல்.'

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் பஸ்தி என்ற பகுதியை சேர்ந்தவர் 42 வயது முஹமது சமீர் மர வேலைகள் செய்யும் ஆசாரி. இவருக்கு ஆத்திகா காத்தூன் என்ற மனைவியும் ஆபித் ஹூசைன் (வயது 9) என்ற மகனும், நூர் ஒஸ்மானி (வயது 8) மகள் என 2 குழந்தைகள், சவுதியிலேயே பிறந்து வளர்ந்தவர்கள். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை இவர்களின் வாழ்க்கையும் அமைதியாக தான் தம்மாம் நகரில் கடந்து கொண்டிருந்தது.

ஓருநாள் இரவு பணியிலிருந்து திரும்பிய கணவருக்காக இரவு உணவு தயாரித்துக் கொண்டிருந்த போது அவரது உடையில் பற்றிய தீ சிக்கி கருகினார் ஆத்திகா, தீயணைப்புத் துறையின் (Civil Defense) உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தார் எனினும் 4 மாத போராட்டங்களுக்குப் பின் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி உயிர் நீத்தார். தம்மாமிலேயே சமூக சேவகர் சவுகத் நாஸ் வக்கோம் என்பவரின் உதவியுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஒருபுறம் மனைவியின் இழப்பு இன்னொருபுறம் சவுதி அரசு விதித்துள்ள உறவுகள் மீதான லெவி எனும் வரிகள் வாட்டும் நிலையில் முஹமது சமீர் தள்ளாடிய போது குழந்தைகளை உறவினர்கள் வசம் இந்தியாவில் விட்டுவிட தீர்மானித்தார் ஆனால் ஏற்கனவே தாயை இழந்து வாடும் அவரது செல்ல மகள் தந்தையை பிரிய மறுத்ததால் அத்திட்டத்தை கைவிட்டார்.

பள்ளிக்குச் செல்லும் தனது குழந்தைகளை தினமும் ஏற்பாடு செய்து அனுப்பிவிட்டு வேலைக்குச் சென்று திரும்புகிறார். பள்ளியில் இருந்து திரும்பும் குழந்தைகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் கேரளாவைச் சேர்ந்த முனீர் தம்பதிகள் அக்குழந்தைகளை தூய அன்புடன் கவனித்துக் கொள்கின்றனர்.

தாய் அன்பை இழந்து வாடும் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக சமீபத்தில் சமீர் தனது மாமியாரை விசிட் விசாவில் எடுத்துள்ளார் என்றாலும் குழந்தைகள் மாமியாரிடம் இருப்பதைவிட பக்கத்துவீட்டு கேரள தம்பதியரிடம் தான் அன்யோன்யமாக ஒட்டிக் கொண்டுள்ளவாம்.

எல்லாக் குழந்தைகளும் தங்களின் பெற்றோருடன் பள்ளி விடுமுறை நாட்களில் 'ஹாப் மூன் பிச்' (Half Moon Beach) போன்ற பொழுது போக்கும் இடங்களுக்கு செல்லும் போது தனது குழந்தைகள் வாரந்தவறாமல் தங்களது தாயின் மண்ணறைக்கு சென்று தரிசித்துவிட்டு வருகிறார்கள் என கலங்குகிறார் முஹமது சமீர்.

இப்போ சொல்லுங்க நமக்கு ஏற்பட்டுள்ள சோதனை லேசு தானே! சமீர் மற்றும் அவருடைய குழந்தைகளின் மனத்துன்பங்கள் அகலவும், நம்முடைய துன்பங்களும் முழுமையாக நீங்கவும், குழந்தைகளை அரவணைக்கும் முனீர் குடும்பத்தினருக்கு நன்மைகளை வேண்டியும் நம்மை படைத்துப் பரிபாலிக்கின்றன ஏகன் அல்லாஹ்விடம் பிரார்த்திப்போமாக!

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.