தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழக கூட்ட அரங்கில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகம் இணைந்து நடத்தும் சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம் தொழில்நுட்ப கருத்தரங்கத்தினை வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இன்று (16.02.2018) தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை முன்னிலையில் கருத்தரங்கம் நடைபெற்றது.
சிறு வெங்காயம் மற்றும் தென்னை நீரா பானம் தொழில்நுட்ப கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்து வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் ககன்தீப் சிங் பேடி பேசியதாவது;
34,000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு வெங்காயம் தமிழ்நாட்டில் 64,000 ஹெக்டேர் பரப்பளவில் விவசாயிகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சிறு வெங்காயம் திருச்சி மாவட்டம், மணச்சநல்லூர், தாத்தையாங்கார்பேட்டை, உப்பிலியாபுரம் ஆகிய இடங்களில் சிறு வெங்காயம் பதப்படுத்தும் மையம் அமைக்கப்படும். தமிழ் நாடு அரசு விவசாயிகளின் நலன்களில் முக்கியத்துவம் கொடுக்கிறது. எல்லா விவசாயிகளும் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். தமிழ் நாடு அரசு ரூ.565 கோடி பயிர் காப்பீடு தொகையினை அரசு பங்காக செலுத்தி வருகின்றது. கடந்த ஆண்டு விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் கீழ் 8 இலட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்திருந்தனர். இந்த ஆண்டு 15,20,000 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. பிப்ரவரி 28ம் தேதிக்குள் காப்பீட்டு தொகை செலுத்த கடைசி நாளாகும்.
சொட்டு நீர் பாசனம் செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவிகிதம் மானியம் அரசு வழங்கி வருகிறது. இத்திட்டத்திற்கு தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. 67,000 ஹெக்டேர் சொட்டு நீர்; பாசனத்திற்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கூட்டு பண்ணையத் திட்டத்தில் 10,000 விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 2000 உழவர் உற்பத்தியாளர்; குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாடு அரசு இந்த ஆண்டு உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு ஊக்கத் தொகை வழங்கவுள்ளது. இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கு ரூ.5 இலட்சம் வழங்கப்படவுள்ளது.
மானாவாரித் திட்டத்திற்காக தமிழக அரசு ரூ.803 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மானாவாரி விவசாயிகளுக்கு உழவு மானியம், சிறு தானிய மானியம், தமிழ் நாடு அரசு மானாவாரி விவசாயிகளுக்கு உதவி செய்து வருகிறது. ரூ.398 கோடி மதிப்பீட்டில் 10 மாவட்டங்களில் பழ வகைகள் உற்பத்தி அதிகப்படுத்திட மையம் அமைக்கப்படும்.
தென்னை மரத்திலிருந்து நீரா பானம் தயாரிக்கும் பணி டிசம்பர் மாதத்திற்குள் ஆரம்பிக்கப்படும். இதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், துணை இயக்குநர், வேளாண் விற்பனைகுழு ஆகியோரிடம் நீரா பானம் விற்பனை தொடர்பாக மனு கொடுத்தால், விவசாயிகள் நீரா பானம் தயாரிக்க உரிமம் வழங்கப்படும்.
இதனை தொடர்ந்து பூதலூர் வட்டம், சக்கரசாமந்தம் கிராமத்தில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டு, தற்போது போதிய அளவு தண்ணீர் இல்லாமல் நெற் பயிர் கருகி வருவதை பார்வையிட்டார்கள். மேலும், அதே போன்று சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, பேராவூரணி ஆகிய இடங்களிலும் நெற் பயிர் கருகி வருவதாகவும், நமது மாவட்டத்தில் 20,000 ஏக்கர் நெற்பயிர் போதிய அளவு தண்ணீர் இல்லாமல் கருகி வருவதாக வேளாண் அலுவலர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சிகளில் இந்திய உணவு பதன தொழில் நுட்ப கழகம் இயக்குநர் டாக்டர் சி.அனந்தராமகிருஷ்ணன், வேளாண் விற்பனைகுழு ஆணையர் எஸ்.ஜெ.சிறு, பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வேளாண் இணை இயக்குநர் மதியழகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஜஸ்டின், பயிற்சி துணை ஆட்சியர் ஸ்ரீதேவி, அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.