.

Pages

Wednesday, February 21, 2018

புனித ஹஜ் பயணிகளின் சந்தேகங்களுக்கு விடையளிக்கும் தானியங்கி செயலி வெளியீடு!

அதிரை நியூஸ்: பிப்.21
ஹஜ் மற்றும் உம்ராவிற்கு வருகை தரும் புனித யாத்ரீகர்களுக்கு உதவும் தானியங்கி பதில் சொல்லும் ஆப் (செயலி) ஒன்று சவுதி ஹஜ் மற்றும் உம்ராவுக்கான அமைச்சகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் குரல் மற்றும் எழுத்து வடிவங்களின் மூலம் நமக்கு தேவையான பதிலை எந்த மனிதர்களின் உதவியும் இன்றி நேரிடையாக இச்செயலி வழங்கும்.

ஆரம்பமாக, இந்த Chatbot வகை செயலி (App) யாத்ரீகர்களுக்குத் தேவையான அடிப்படை சந்தேகங்களுக்கான பதில்கள், சவுதியில் இயங்கும் ஹஜ், உம்ரா ஏற்பாட்டாளர்களின் விபரங்கள் ஆகியவற்றை வழங்கும் என்றாலும் காலத்தின் தேவைக்கு ஏற்ப இதன் தரமும் தகவலும் உயர்த்தப்படும். இந்த செயலி அடுத்தாண்டு முதல் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.