தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் தஞ்சாவூர் ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வருவதை செய்தியாளர் பயணத்தில் இன்று (27.02.2018) பொதுப்பணித்துறை ( கட்டடம், கட்டுமானம், பராமரிப்பு ) பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உதவி செயற்பொறியாளர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
தஞ்சாவூரில் கோர்ட் ரோட்டில் செயல்பட்டு வரும் நீதிமன்றங்கள் இட நெருக்கடி காரணமாக தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகம் அருகில் சுமார் 13 ஏக்கர் 5693 சதுரடிகள் பரப்பளவில் தரை தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என 1,55,916 சதுரடி பரப்பளவில் ஒருங்கிணைந்த நீதி மன்ற கட்டடம் கட்டப்பட்டு வருகின்றது. தரை தளமானது 63,270 சதுரடி பரப்பளவில், நில அபகரிப்பு நீதி மன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் 1, 2, 3, நீதிமன்றங்கள், மோட்டார் வாகன விபத்து நீதிமன்றங்கள் 1, 2, (தனி மாவட்ட நீதிமன்றம்), மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் 1,2 ஆகியவையும், முதல் தளத்தில் 29,376 சதுரடி பரப்பளவில் குடும்ப நல நீதிமன்றம், முதன்மை சார்பு நீதி மன்றம், கூடுதல் சார்பு நீதிமன்றம், முதன்மை மாவட்ட நீதி மன்றம், கூடுதல் மாவட்ட நீதிமன்றம் 1,2 சிறப்பு நீதி மன்றம் (அத்தியாவசியப் பண்டங்கள்), விரைவு நீதி மன்றம் (இ.கோர்ட்), மகளிர் நீதி மன்றங்களும், மேலும், 6 எண்ணிக்கையிலான மாடிபடி கட்டுகள், 4 எண்ணிக்கையிலான மின்தூக்கிகள், 18 எண்ணிக்கையிலான நீதிபதிகளின் கார்கள் நிறுத்த வாகனக்கூடம், பொது மக்கள் கார்கள் மற்றும் இரண்டு சக்கர வாகனங்கள் நிறுத்தும் இடமும் அமைக்கப்படவுள்ளது. இக்கட்டடத்தில் நீதிமன்றங்கள் அனைத்தும் குளிர் சாதன அறையாக அமைக்கப்படவுள்ளது. இப்பணியானது 31.01.2019-க்குள் முடிக்கப்பட்டு விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
இந்நிகழ்ச்சியின் போது செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம்,
பொதுப்பணித்துறை ( கட்டடம், கட்டுமானம், பராமரிப்பு ) பிரிவு உதவி செயற்பொறியாளர் பி.செந்தில்குமார், உதவி பொறியாளர் எம்.ரகு, ஒப்பந்தகாரர் எஸ்.ஈஸ்வரன் மற்றும் பலர் உடன் உள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.