.

Pages

Wednesday, February 21, 2018

ஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதியவர்!

அதிரை நியூஸ்: பிப்.21
ராஜஸ்தானில் ஆண் குழந்தைக்காக 30 வயது பெண்ணை மணந்த 83 வயது முதியவர்.

பரம்பரை சொத்துக்களை ஆண்டு அனுபவிக்க ஆண் வாரிசு இல்லையே என கவலைப்பட்ட 83 வயது முதியவருக்கு அவருடைய முதல் மனைவியும் பச்சை கொடி காட்ட, ஒரு 30 வயது பெண்ணுக்கு ஊரறிய தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்ட கல்யாண நிகழ்ச்சியில் தாலி கட்டினார் சுக்ராம் பைரவா என்கிற திடீர் வாலிபர்.

சுக்ராம் பைரவாவுக்கு ஏற்கனவே ஒரு மகன் இருந்து சுமார் 20 வருடங்களுக்கு முன் நோய் முற்றி இறந்து விட்டாராம், 2 மகள்களும் உண்டு அவர்கள் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு விட்டனர். பரம்பரை சொத்தாக ராஜஸ்தானில் ஏராளமான நிலபுலன்கள், அருகாமையுள்ள டெல்லியில் வீடு வாசல்கள் என சொத்துக்கள் உள்ளனவாம். இத்தனையையும் ஆண்டு அனுபவிக்கத்தான் சொந்தமாக ஒரு ஆண் வாரிசு வேண்டும் என கோதாவில் இறங்கிவிட்டார் சுக்ராம்.

அரை நூற்றாண்டுகளுக்கு மேல் வயது வித்தியாசமுள்ள மணப்பெண்ணை மணக்க குதிரையேறிச் சென்ற சுக்ராம் தன்னுடைய கிராமத்தினரை மட்டுமல்லாமல் சுற்றுப்பட்டு 12 கிராமத்தினரையும் அழைத்தும் அசத்தியுள்ளார்.

ஒருவேளை மீண்டும் பெண் குழந்தை பிறந்துவிட்டால்? அது நம்ம கவலையில்லை. இந்த கல்யாணத்தைவிட மிகப்பெரும் காமெடியாக அமைந்த அரசு அதிகாரிகளின் செயல்களை பாரீர்...!

1. இந்தத் திருமணத்தை பற்றி கருத்து சொல்ல கலெக்டர் முன்வரவில்லை, லீவுங்களாம்.

2. கலெக்டருக்கு அடுத்த நிலையில் உள்ள கூடுதல் மாவட்ட மாஜிஸ்திரேட் ராஜ் நாராயன் சர்மா என்பவர், அந்த கிராமத்திற்கு நேரில் சென்று விசாரித்தபின் தான் கருத்து சொல்ல முடியும் என எஸ்கேப்.

3. ஜில்லா பரிஷத் தலைவர் சுரேந்திர மகேஸ்வரி என்பவர் 'அப்படியா எனக்குத் தெரியாதே' என்றவர் விசாரணைக்கு உத்தரவிடுகிறேன் என சொல்லிட்டு போயிட்டாரு.

4. தாசில்தார், தொகுதி மேம்பாட்டு அதிகாரி மற்றும் உள்ளூர் போலீஸ் நிலைய அதிகாரி ஒருவர் கொண்ட மூவர் குழு அமைக்கப்பட்டு நேரடியாக சென்று விசாரிப்பார்களாம், என்ன இருந்தாலும் முதல் மனைவி உயிரோடு இருக்கும் போது இரண்டாவது முடிக்கிறது 'டெக்னிக்களாக' தப்புத்தானுங்களே என திருவாய் மலர்ந்துள்ளனர் அதிகாரிகள்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.