பேராவூரணி பிப்.17
பேராவூரணியில் நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை மூடப்போவதாக அறிவித்துள்ள ரயில்வே நிர்வாகத்தின் முடிவை ரத்து செய்து, மீண்டும் இயக்க வலியுறுத்தி வரும் பிப் 28 ஆம் தேதி புதன்கிழமை சாலைமறியல் நடத்தப்போவதாக ரயில்வே கேட் உபயோகிப்பாளர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து டாக்டர் ஜமால் மருத்துவமனை வழியாக நீலகண்டபுரம் செல்லும் ரயில்வே கேட் எண் LC NO. 121 உள்ளது. நூற்றாண்டு காலமாக புழக்கத்தில் உள்ள இந்த ரயில்வே கேட்டை, தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி - திருவாரூர் அகல இரயில் பாதை சீரமைப்பின் போது, நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே துறை முடிவு செய்துள்ளது.
இவ்வழியே மருத்துவமனை, பள்ளிக்கூடம் உள்ளதாலும், ஏறத்தாழ ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளதாலும், இவ்வழியே கழனிவாசல், கொரட்டூர், சோழகனார்வயல், ரெட்டவயல், பெருமகளூர் என 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருப்பதாலும், நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த இரயில்வே கேட்டை மூடக்கூடாது என பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்காக ரயில்வே கேட் உபயோகிப்பாளர் கூட்டமைப்பு என ஏற்படுத்தி மத்திய, மாநில அமைச்சர்கள், இரயில்வே துறை உயர் அதிகாரிகள் என பலரையும் சந்தித்து கோரிக்கை விடுத்தனர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை, எம்.பிக்கள் ஆர்.வைத்திலிங்கம், கு.பரசுராமன், எம்எல்ஏ மா.கோவிந்தராசு, முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் என்.அசோக்குமார், பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா என பல்வேறு தரப்பினரும் இந்த ரயில்வே கேட்டை பார்வையிட்டு, இதனை மூடாமல் இருக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
காரைக்குடி- பட்டுக்கோட்டை இடையே வெள்ளோட்டம் விடப்பட்ட நிலையில், முதல் கட்டமாக வரும் மார்ச் 1 ஆம் தேதிரயில் சேவை தொடங்கும் எனத் தெரிகிறது. இதையொட்டி ரயில்வே கேட்டை
(7எண் LC NO. 121) மூடப்போவதாக தெரிகிறது.
இந்நிலையில் பேராவூரணி நீலகண்ட விநாயகர் கோயில் மண்டபத்தில், சனிக்கிழமை அன்று ரயில்வே கேட் உபயோகிப்பாளர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம், அமைப்பின் தலைவர் வழக்கறிஞர் எஸ்.மோகன் தலைமையில் நடைபெற்றது.
இதில் இரயில்வே கேட்டை மூடும் முடிவைக் கண்டித்து வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி புதன்கிழமை பேருந்து நிலையம் அருகில் அனைத்து அரசியல் கட்சியினர், சமூக நல பொது அமைப்புகள், பொதுமக்கள், மகளிர் அமைப்புகள் இணைந்து, ஆயிரம் பேர் பங்கேற்கும் சாலைமறியல் நடத்துவது எனவும், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக ரயில் மறியல் போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் ஆறு.நீலகண்டன், நா.வெங்கடேசன், சித.திருவேங்கடம் மற்றும் உபயோகிப்பாளர் குழு நிர்வாகிகள் யாசின், கணேசன் சங்கரன், பொன்னன் சங்கரன், நடராஜன், தங்கவேலு, லோகநாதன், சத்தியமூர்த்தி, கோபி, குழ.சரவணன், அ.மு.கணேசன், மகளிர் சங்கம் சகிலா உள்ளிட்ட 300 பேர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.