.

Pages

Wednesday, February 14, 2018

மணிமாலா மரணத்திற்கு நீதி கேட்டு ~ செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்!

பேராவூரணி பிப்.14
மருத்துவர்கள் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் செவிலியர் வெள்ளக்கோயில் மணிமாலா மரணத்திற்கு நீதிகேட்டு, பேராவூரணியில் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்து புதன்கிழமை அன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

செவிலியர் மணிமாலா மரணத்திற்கு காரணமான மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்யவேண்டும். அவர்களை கைது செய்து, காவல்துறை மற்றும் துறைரீதியான விசாரணை நடத்த வேண்டும். வட்டாட்சியர் தலைமையில் நீதிவிசாரணை நடத்த வேண்டும். மணிமாலா குடும்பத்திற்கு இழப்பீடும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

செவிலியர்களுக்கென தனி இயக்குநரகம் வேண்டும். நோய் குறிப்பு அறிவுறுத்தல் அறிக்கை தவிர, வேறு எந்த வகையிலும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இல்லாமல், செவிலியர் கண்காணிப்பாளர் பொறுப்பில் செவிலியர் பணிசெய்யவேண்டும். செவிலியர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்" என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாவட்ட இணைச்செயலாளர் கே.ரமேஷ் தலைமையில் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை -2, செவிலியர்கள், மருந்தாளுநர்கள், ஆய்வக உதவியாளர்கள், மருத்துவமனை அனைத்து பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் வேன் ஓட்டுநர் மற்றும் தொழில் நுட்பநர்கள் அனைவரும் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து 20 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படாத வகையில் அவசர சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை பிரிவு செவிலியர்கள் பணியில் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.