.

Pages

Saturday, February 17, 2018

6 மாதம் பிரான்ஸ், 6 மாதம் ஸ்பெயின் என நாட்டை மாற்றிக் கொள்ளும் ஓர் குட்டித்தீவு!

அதிரை நியூஸ்: பிப்.17
நாடாறு மாதம் காடாறு மாதம் என விக்கிரமாதித்தன் வேதாளம் கதையில் வரும் அதுபோல இரு நாடுகளுக்கிடையே அமைந்துள்ள ஒரு குட்டித்தீவு தலா 6 மாதங்கள் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் என மாறி மாறி தனது தேசியத்தை சுமூகமாக மாற்றி வந்து கொண்டிருக்கின்றது. கடந்த 13வது நூற்றாண்டில் இருந்து இந்தத் தீவில் தான் இருநாடுகளுக்கிடையேயான பல போர் அமைதி ஒப்பந்தங்கள் மற்றும் வணிக ஒப்பந்தங்கள் நடைபெறும் பொதுவான இடமாகவும் திகழ்ந்து வருகிறது.

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு இடையேயான சர்வதேச எல்லையாக அமைந்துள்ளது 'பிடாஸோவா ஆறு'. (Bidasoa River) இந்த ஆற்றின் ஒரு கரையில் பிரான்ஸின் 'ஹென்டாயா' (Hendaye) நகரமும் இன்னொரு கரையில் ஸ்பெயினின் 'இருண்' ( Irún) நகரமும் அமைந்துள்ளன. இந்த பிடாஸோவா ஆற்றின் மத்தியில் மிகச்சிறிய 'பெஸண்ட் தீவு' (Pheasant Island) எனும் குட்டித்தீவு அமைந்துள்ளது. இதன் மொத்த பரப்பளவு 0.00682 km2 (0.00263 sq mi) மட்டுமே.

1659 ஆம் ஆண்டு இருநாடுகளுக்கு இடையே செய்து கொள்ளப்பட்ட 'பைரினீஸ்' ஒப்பந்தப்படி (Treaty of the Pyrenees in 1659) இந்தத்தீவு இருநாடுகளுக்கும் பொதுவான தீவாக ஏற்றுக் கொள்ளப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 முதல் ஜூலை 31 வரை ஸ்பெயின் நாட்டு வசமும் ஆகஸ்ட் 1 முதல் ஜனவரி 31 வரை பிரான்ஸ் நாட்டின் கீழும் அந்தந்த நாட்டுக் கடற்படை தளபதிகள் பொறுப்பின் கீழ் 6 மாதங்களுக்கு வருகிறதுடன் (Navy officers commanding in Bordeaux for France, and in San-Sebastian for Spain) அவர்களாலேயே பொறுப்பும் மாற்றியளிக்கப்படுகிறது. இங்கு மீன் பிடிக்கும் உரிமையையும் தலா 6 மாதங்களுக்கு பகிர்ந்து கொள்கின்றன இருநாடுகளும். இந்த பகிர்வு ஒப்பந்தம் 1856 மற்றும் 1901 ஆண்டுகளில் மறுஉறுதியும் செய்யப்பட்டுள்ளன.

பல்வேறு ஓப்பந்தங்களும், இரு நாட்டு அரசர்கள், இளவரசர்கள் மாற்றுநாட்டு இளவரசிகளை பெண் பார்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. இங்கு பொதுமக்கள் வாழ அனுமதியில்லை என்றாலும் ஜூலை மாதத்தில் ஒருநாள் ஸ்பெயினாலும், செப்டம்பரில் ஒருநாள் பிரான்ஸாலும் இத்தீவிற்குள் பொதுமக்கள் சுற்றிப்பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர் என்றாலும் அந்தந்த நாட்டு ஆற்றின் கரைகளிலிருந்து இந்த தீவை முழுமையாக ரசிக்க முடியும். 1940 ஆம் ஆண்டு இத்தீவின் நேரெதிரே உள்ள பிரான்ஸ் கரையோரம் உள்ள ரயில்வே ஸ்டேசனில் வரலாற்று சிறப்புமிக்க ஹிட்லர் - பிரான்கோ சந்திப்பும் நிகழ்ந்துள்ளது.

Source: mylot.com
தமிழில்: நம்ம ஊரான் 

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.