.

Pages

Tuesday, May 15, 2018

குடிநீரை உறிஞ்சிய 18 மின்மோட்டார்கள் பறிமுதல் ~ பேரூராட்சி அதிகாரிகள் நடவடிக்கை (படங்கள்)

பேராவூரணி மே.15-
பேராவூரணி பேரூராட்சி 11, 12 ஆகிய வார்டுகளில் சீரான குடிநீர் விநியோகிக்கப்படவில்லை எனக்கூறி, பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் நேரில் சென்று முறையிட்டனர்.

இதையடுத்து கலெக்டர்  அண்ணாதுரை உத்தரவின்பேரில், பேரூராட்சிகள் துறை தஞ்சை மண்டல உதவி இயக்குநர் ந.விஸ்வநாதன்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு, குடிநீர் கண்காணிப்பு குழு தலைவர் பேராவூரணி தாசில்தார் பாஸ்கரன் மற்றும்  பேரூராட்சி செயல் அலுவலர் மு.பொன்னுசாமிக்கு அறிவுறுத்தினார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை  அன்று காலை பேரூராட்சி தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் தலைமையில், குடிநீர் திட்ட பணியாளர்கள் யோ.சார்லஸ், செல்வகுமார், ரமேஷ், துப்புரவு மேற்பார்வையாளர்கள் வீரமணி, சந்தானசெல்வம், மின் பணியாளர் இ.கோவிந்தசாமி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் எஸ்.பி.ஜி.சர்ச் ரோடு, ஆர்.சி.சர்ச் ரோடு, கருப்பமனை மெயின்ரோடு, காமான்டி கோயில், வீமநாயகி அம்மன் கோயில் தெரு, மேலத்தெரு, கிழக்கு தெரு உள்ளிட்ட 11, 12 ஆவது வார்டுகளில் வீடுவீடாகச் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். 

இதில் குடிநீர் குழாய் இணைப்புகள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு, மின்மோட்டாரைப் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவதும், தோட்டங்கள் மற்றும் தென்னந்தோப்புகளுக்கு பயன்படுத்துவதும் கண்டறியப்பட்டு, 18 மின் மோட்டார்கள் மற்றும் தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிய சுமார் 800 மீட்டர் நீளமுள்ள குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் (பொ) மு.பொன்னுசாமி, தலைமை எழுத்தர் வி.சிவலிங்கம் ஆகியோர் கூறுகையில், "வரும் கோடை காலத்தையொட்டி, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி, தடையின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்ய பேரூராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்மோட்டார் பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சுவது சட்டப்படி குற்றமாகும். காவல்துறை மூலமாக நீதிமன்ற நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அவ்வாறு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படும். குடிநீர் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும். கோடையை சமாளிக்க குடிநீரை சிக்கனமாக பயன்படுத்தி, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.