இந்நிலையில் நேற்று மாலை மல்லிபட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் மற்றுமொரு அருவாள் வெட்டு சம்பவம் நடைபெற்றுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுபட்டினத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி ( 50 ) இவர் அந்தபகுதியில் முன்னாள் கிராம பொறுப்பில் இருந்துள்ளார். நேற்று மாலை புதுபட்டினம் அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கட்டுமாவாடி செல்ல வழியை கேட்டதாகவும், ரெங்கசாமி கையை காட்டி வழியை சொல்ல முற்படும்போது மர்ம நபர்கள் திடிரென கையில் வைத்திருந்த அருவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடி விட்டதாக தெரிகிறது. இதில் காயமடைந்த ரெங்கசாமி தஞ்சை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
காலத்தின் மோசம், மக்களில் அஜாக்கிரதை.
ReplyDeleteநண்பர் ரெங்கசாமி அவர்கள் ஒரு காங்கிரஸ்காரர்.இவர்களை தாக்கிய சமூகத்திற்கு எதிரான குண்டரகளை காவல்துறையினர் கைதுசெய்ய வேண்டும்.
ReplyDelete