அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் இன்று காலை மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை அப்பகுதியில் சுற்றி திரிந்த ஆறு , எழு வெறிநாய்கள் சூழ்ந்துகொண்டு கடித்து குதறியது. இதில் ஒரு ஆடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மற்ற ஆடுகள் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடி வருகிறது. இதில் மூன்று ஆடுகளின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தகவலறிந்த ஓய்வு பெற்ற கால்நடை கம்பவுண்டர் உயிருக்கு போராடும் ஆடுகளுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து வருகிறார். காலையில் நிகழ்ந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் ஏராளமான குழந்தைகள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அப்பகுதியினர் நம்மிடம் ஆதங்கத்தோடு கூறுகையில்...
'நடந்த சம்பவம் எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுவர் சிறுமிகள் அதிகளவில் புழங்கி வரும் இந்த பகுதியில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் ஏராளமான சிறுவர் சிறுமிகள் கல்வி பயின்று வருகின்றனர். காலை நேரங்களில் இந்த பகுதி பெரும் பரபரப்பாக காணப்படும். இன்று ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள்கள் நாளை சிறுவர் சிறுமிகளை கடித்து குதறாது என்பதற்கு என்ன உத்திரவாதம் ? கடந்த சில வருடங்களாக இந்த பகுதியில் நாய்கள் தொல்லை இல்லாமல் இருந்து வந்தது. சமீபகாலமாக மீண்டும் அதிகளவில் நாய்கள் புழக்கம் காணப்படுகிறது.
அதிகாலை நேரங்களில் தொழுவதற்காக பள்ளிகளுக்கு செல்வோருக்கும், பள்ளிக்கூடங்களுக்கு செல்லும் மாணவ மாணவிகளுக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. அதிரையில் மீண்டும் அதிகரித்துள்ள நாய்கள் நடமாட்டத்தை குறைக்க அதிரை பேரூர் நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.