ஓங்கி ஒலி எழுப்பிக்கொண்டு விரைவாக சென்றுகொண்டிருக்கும் ஒரு ஆம்புலன்சை எங்கேயாவது ஒரு இடத்தில் நாம் பார்த்தவுடன் முதலில் நம் மனதில் ஒரு வித அனுதாபம் ஏற்பட்டு பிறகு கடந்து செல்கின்ற அந்த வாகனத்திற்கு வழி விடுங்க... வழி விடுங்க... என எண்ணுமளவிற்கு மனித நேயம் நம்மிடத்தில் வளர்ந்து காணப்படும்.
இதற்கு காரணமில்லாமல் இல்லை மனித வாழ்வில் இதன் பயன்பாடு எண்ணிலடங்கா. ஒருவருக்கு ஏற்படும் விபத்தாகட்டும், அவசர சிகிசையாகட்டும், இறப்புகள், பிரசவம் போன்ற நிகழ்வுகளுக்கு முக்கிய பங்களிப்பது ஆம்புலன்ஸ் என்பது நாம் மறுக்க இயலாது. எப்போது, எங்கே, யாருக்கு இதன் தேவை என்பதையும் யாராலும் கணிக்க முடியாவிட்டாலும் இதன் தேவையை எனக்கு தேவையில்லை என்று ஒதுக்கித் தள்ளவும் முடியாது. அவசர காலத்தில் இந்த வாகனத்தை பயன்படுத்தியோரிடம் கேட்டால் இதன் அருமையை நமக்கு தெளிவாக எடுத்துரைப்பார்கள்.
நம் அலைபேசியில் சேமித்து பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு எண் என்றால் அது அவசர காலக் கட்டங்களில் நமக்கு விரைவாக உதவ முன் வரும் ஆம்புலன்ஸ்ஸின் தொடர்பு எண்கள் மட்டுமே.
சரி விசயத்திற்கு வருவோம்...
அதிரை சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென நிகழும் விபத்துகள், அவசர சிகிச்சை, இறப்புகள், பிரசவம் போன்றவற்றிற்கு தமுமுக ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அழைத்த சில நிமிடங்களில் சாதி மத பேதமில்லாமல், நேரம் காலம் பார்க்காமல் ஓடோடி சென்று உதவி வருகிறது. கடந்த சில வருடங்களாக அதிரை ஈசிஆர் சாலையில் அதிகளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிரழப்பு ஏற்பட்டு விடுகிறது.
விபத்தின் போது வீணாக ஏற்படும் தமாதத்தை குறைக்கும் விதத்தில் அதிரை ஈசிஆர் சாலையில் ( கல்லூரி முக்கத்தில் ) நேற்று முதல் தமுமுக ஆம்புலன்ஸ் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர் சகாபுதீன் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தின் பொறுப்பாளர் சேக் நசுருதீன் ஆகியோர் ஆம்புலன்ஸ் கேட்டு யாரேனும் திடீரென அழைத்தால் விரைந்து செல்ல தயார் நிலையில் வாகனத்தின் அருகே நிற்கின்றனர்.
97 50 50 50 94
ReplyDeleteநன்றி
DeleteAnna dubai aamplanssnambara
ReplyDeletefaizal
நல்ல சேவை மணப்பான்மையுடன் அரசியல் உள்நோக்கம்மில்லாமல் செயல்படும்போது அனைத்து சமூதாயமும் வரவேற்க்கும்
ReplyDelete