.

Pages

Thursday, February 5, 2015

காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விளையாட்டு விழா [ படங்கள் இணைப்பு ]

அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் 66 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சிகள் இன்று [ 05-02-2015 ] காலை 9 மணியளவில் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் உதுமான் முகைதீன் இந்திய தேசியக்கொடியை ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

வரவேற்புரை நிகழ்த்திய பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் அன்புடன் வரவேற்றார்.

முன்னதாக அதிரை காவல்துறை உதவி ஆய்வாளர் பசுபதி ஏற்றி வைத்த ஒலிம்பிக் சுடரை விளையாட்டு வீரர்கள் கையில் ஏந்தியவாறு அதிரை பேருந்து நிலையத்திலிருந்து பள்ளி மைதானத்தை நோக்கி விரைந்து வந்தனர். இதைதொடர்ந்து அணிவகுப்பு மரியாதையுடன் விளையாட்டு போட்டிகள் ஒவ்வொன்றாக நடைபெற்றது.

விளையாட்டு போட்டிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர் மஹபூப் அலி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் ஆகியோரின் மேற்பார்வையில் உடற்கல்வி ஆசிரியர்கள், ராஜா, ஜெயகாந்தன் ஆகியோர் வழிநடத்தி சென்றனர். நிகழ்சிகள் அனைத்தையும் தமிழ்துறை ஆசிரியர்கள் அஜீமுதீன், உமர் பாரூக், கோப்பெருஞ்சோழன் ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள்.

விழாவில் பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ் கே எம் ஹாஜா முகைதீன், உதவி தலைமை ஆசிரியர் முஹம்மது ஹனீபா, காதிர் முகைதீன் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முருகானந்தம், முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் ராமச்சந்திரன், முன்னாள் ஆசிரியர்கள் சீனிவாசன், உலகநாதன், ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், முன்னாள் ஆசிரிய பெருமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

பள்ளியின் விளையாட்டு வீரர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு தங்களின் தனித்திறமையை வெளிப்படுத்தினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறும். இதில் பூண்டி புஷ்பம் கல்லூரியின் உடற்கல்வி துறை தலைவர் முனைவர் சி. ராபர்ட் அலெக்ஸ்சாண்டர் கலந்துகொண்டு வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்க இருக்கிறார்.

2 comments:

  1. விளையாட்டு போட்டியில் வழக்கமாக உள்ள Event தான் நடை பெருவது வழக்கம், இதில் வெற்றி பெறுபவர்களுக்கு தான் அடுத்த நிலை அதாவது District , State போக வாய்ப்புண்டு. விளையாட்டில் கொஞ்சம் வித்தியாசமா சாதனை நிகழ்த்தினார்கள் திருச்சி மாணவர்கள், 4 மாணவர்கள் 5 நிமிடத்தில் 631 குட்டி கருணை அடித்து சாதனை செய்துள்ளார்கள், இதனை முறியடிக்க நம் மாணவர்கள் முயற்சிக்கலாம்.

    பள்ளிக்கு லேட்டா வந்ததற்காக தோப்பு கருணை போட்டவர்கள் நினைவுக்கு வருது சரி, அவங்களை விட்டுடுவோம்.

    66 ஆம் ஆண்டு விளையாட்டு விழா நிகழ்ச்சி காண வந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். முன்னால் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களை நம் பள்ளிக்கு சிறப்புரை நிகழ்த்த, அழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.