.

Pages

Thursday, February 5, 2015

மலேசியாவில் நடைபெற்ற உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டில் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியைகள் கெளரவிப்பு !

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு கடந்த 29-01-2015 அன்று முதல் 01-02-2015  வரை நான்கு நாட்கள் நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழக அரசின் சார்பில் தமிழகமெங்கும் உள்ள தமிழ்மொழி வல்லூனர்கள் 250 பேர் கலந்து கொண்டனர்.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பின் பேரில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியின் வரலாற்று துறை பேராசிரியை முனைவர் பரீதா பேகம் மற்றும் தமிழ்த்துறை பேராசிரியை ஜைனபா பேகம் ஆகியோர் கலந்துகொண்டனர். இதில் 'தமிழ்நாட்டில் இஸ்லாமிய கட்டிட கலை' என்ற தலைப்பிலும், 'ஏழரை பங்காளி வகையறா' என்ற நாவலின் அடிப்படையில் 'இஸ்லாமிய வாழ்வியல் சிந்தனை' என்ற தலைப்பிலும் கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மலேசியா பிரதமர் நஜீப் ரஸாக், சிங்கப்பூர் பிரதமர் லி ஹிஸின் ஆகியோர் கலந்து கொண்டு பேராசிரியை முனைவர் பரீதா பேகம், பேராசிரியை ஜைனபா பேகம் ஆகியோருக்கு சான்றிதல் மற்றம் கேடயங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர். பல்வேறு நாடுகளிலிருந்து வருகை தந்த தமிழ் மொழி வல்லுனர்கள் இந்த மாநாட்டில் கலந்துகொண்டனர்.

கல்லூரி வரலாற்றில் வெளிநாடு சென்று கட்டுரைகள் சமர்ப்பித்து சான்றிதல் மற்றம் கேடயம் பெற்றிருப்பது இதுதான் முதல் தடவை என கூறப்படுகிறது. மேலும் மலேசியா வாழ் முன்னாள் நமது கல்லூரி மாணவர்கள் பலர் பேராசிரியைகள் பரீதா பேகம், ஜைனபா பேகம் ஆகியோருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.

2 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.