.

Pages

Wednesday, February 4, 2015

அபாயம் ! பயங்கரம் !! அதிர்ச்சி ரிப்போர்ட் !!! ஆண் துணை இல்லாத பெண்கள் !!! ஆனால் உண்மை!?

பொதுவாக எல்லா பெண்களின் நலன் கருதி எழுதப்பட்டதாகும்.

பெண்களை தாயாகவும், சகோதரிகளாகவும், போற்றிவந்த இவ்வுலகில் அதுவும் இன்றைய கால கட்டத்தில் பல பெண்களின் நிலை மிகவும் மோசமானதாக இருக்கின்றது, பாதுகாப்பு இல்லாமல் இருக்கின்றது, சில ஆண்களின் கேளிக்கை பொருளாக இருக்கின்றது, படு கேவலமாக இருக்கின்றது, பல ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் புகைப்படத்தோடு அம்பலமாகிக் கொண்டிருக்கின்றது.

இப்படி ஒரு புறம் இருக்க இஸ்லாமிய பெண்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஆண் துணை இல்லாமல் பல இடங்களுக்கு தனியாக சென்று வருகின்றனர். இதை பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கின்றது.

நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள், இந்த இரண்டு பெருநாள் தினத்தை நாம் விமர்சையாக கொண்டாடி வருகின்றோம், இது இஸ்லாம் தோன்றிய காலம் தொட்டே நடந்து வருகின்றது. மேலும் இதற்கு இடையே திருமணம் போன்ற விஷேசங்களுக்கும் வந்து போகின்றது.

புது ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள்,  மேலும் விரும்பிய பொருட்கள் வாங்க வேண்டுமானால் நமதூரையே நாடலாம், விரும்பியது இங்கு இல்லையென்றால் நமதூருக்கு அருகில் இருக்கும் பட்டுக்கோட்டையே போதும், இன்று பட்டுக்கோட்டையில் எல்லா விதமான சாமான்கள் வகை வகையாக தடை இல்லாமல் கிடைத்துக் கொடிருக்கின்றது, விரும்பிய மாடல்கள் இங்கு இல்லையென்றால் அடுத்தது தஞ்சாவூர் அல்லது திருச்சி அல்லது மதுரை அல்லது சென்னை இப்படி பல பெறுநகரங்களில் போய் வாங்கலாம். அதே சமயத்தில் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட தகுந்த ஆண் துணையோடு போகவேண்டும் என்று ஒரு நிர்பந்தம் இருக்கின்றது. இதை யாரும் விரும்புவது கிடையாது.

ஆண்களால் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் ஏராளாம், வெளியில் வந்தது சொற்பமே, வராதது அதிகமே.

அண்மையில் சில மாதங்களுக்கு முன் அதிரை முத்துப்பேட்டை இ.சி.ஆர். சாலையில் அவ்வழியே செல்லும் சில வாகனங்களை வழிமறித்து பெண்களுக்கு இடைஞ்சல் கொடுத்தது எல்லோரும் அறிவோர்.

சில மருத்துவர்கள், சில ஆசிரியர்கள், சில முதலாளிகள், சில மத குருமார்கள் இப்படி பல ஆண் முதலைகள் பெண்களை நாசப்படுத்திக் கொண்டிருக்கும் சம்பவங்கள் அடிக்கடி பல ஊடக வாயிலாக தினம் தினம் அறிகின்றோமே.   

கடந்த சில வருடங்களாக நமதூரில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட இளம் வயது பெண்கள் ஒன்றாக சேர்ந்து 16பேர்கள் அமரக்கூடிய பல மினிபஸ்களை வாடகைக்கு எடுத்து காலை 6.30மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு திருச்சியை அடைந்து அங்கேயே பகல் பொழுதை கழித்துவிட்டு, பல கடைகள் ஏறி இறங்கி தாங்கள் விருப்பப்பட்ட புது ஆடைகளை வாங்கினதோடு நின்று விடாமல் மற்ற கடைகளுக்கும் கூட்டம் கூட்டமாக சென்று இன்னும் பிற சாமான்களையும் வாங்கி மாலையானவுடன் மினி பஸ் இறக்கிவிட்ட இடத்திற்கு வந்து பஸ்ஸில் ஏறி பல வழி தடங்களை கடந்து இரவு 9.30மணிக்கு வீட்டை வந்து அடைகின்றனர்.

“இவ்வளவும் தகுந்த ஆண் துணை இல்லாமல்

பெண்களே, ஊர் திரும்பும் வழியில் போராட்டம், கலவரம், ஸ்டிரைக், ஹர்த்தால், விபத்து, சூறாவளி, அடைமழை, பாலம் உடைப்பு போன்ற சம்பவங்களினால் போக்குவரத்து பல மணி நேரங்கள் நகர முடியாமல் ஸ்தம்பித்து விட்டது என்று வைத்துக் கொள்வோம்., மேலும் இரவு நேரம் வேறு, எவ்வளவு துன்பங்களை நீங்கள் அனுபவிக்க நேரிடும், அந்த சமயத்தில் உங்களால் என்ன செய்ய முடியும்? நீங்கள் என்ன அவ்வளவு பெரிய பலசாலிகளா? சிறிய கரப்பான் பூச்சியைக் கண்டால் ஆ!!ஓ!!! என்று அலறும் நீங்களா இப்படியான காரியத்தை செய்வது? அப்படி ஒரு அசம்பாவிதம் ஏற்பட்டால் அதுக்கு யாரு பொறுப்பு? சமுதாயமா அல்லது குழுவாக போகும் தோழிகளா அல்லது இடைப்பட்ட ஊர் மக்களா அல்லது மினி பஸ்ஸா அல்லது ஓட்டுனரா அல்லது கணவனா அல்லது பெற்றோர்களா?

இதே நீங்கள் ஆண் துணையோடு போயிருந்தால் இப்படி கூட்டமாக போயிருக்க மாட்டீர்கள்,  உங்கள் வீட்டு ஆண் துணையோடு விருப்பப்பட்ட நேரத்தில் விருப்பப்பட்ட வாகனத்தில் விருப்பப்பட்ட இடத்திற்கு பத்திரமாக போய்விட்டு திரும்புவீர்கள். வரும் வழியில் மேலே சொல்லப்பட்ட சம்பவங்கள் ஏதும் ஏற்பட்டாலும் ஆண் துணை அருகில் இருக்கும்போது உங்களுக்கு தைரியம் இருக்கும், மேலும் உங்களுக்காக துணையோடு வந்த ஆணும் உங்களுக்கு ஏதும் நடக்கா வண்ணம் பாதுகாத்துக் கொள்வார்.

தனித்து போக பெண்களுக்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை! இஸ்லாமிய மார்க்க வல்லுனர்கள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் நாட்களில் இப்படி நடக்காமல் இருக்க ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

தனித்து போக விரும்பும் பெண்களே, இந்த உலகம் ஒவ்வொருத்தரையும் சந்தேகக் கண்ணோடுதான் பார்கின்றது, இருந்தாலும் உங்களை யாரும் குறைகூறி குற்றம் சுமத்தவில்லை. அவரவர் தன்னைத்தானே நன்கு ஆராய்ந்து பாருங்கள். அதே சமயம் வெளிநாட்டில் வாழும் கணவர்மார்களும் தம் தங்கள் குடும்ப விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
 
இந்தக் கட்டுரை இஸ்லாம் பெண்களுக்கு மாத்திரமன்றி எல்லா பெண்களுக்கும் பொருந்தும் வகையில் எழுதப்பட்டதாகும்..
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.முஹம்மது அலியார்.
Human Rights and Consumer Rights Included.
Thanjavur District Organizer. Adirampattinam-614701.

9 comments:

  1. இது மாதிரி நிறைய விழிப்புணர்வை எழுதுங்கள்....

    ReplyDelete
  2. பொதுவாக பெண்கள் வெளியில் செல்லும்போது பாதுகாப்புடன் செல்வது அவசியமே.! அவசியத் தேவைகளுக்கு சூழ்நிலை கருதி பெண்கள் மட்டுமாக செல்வதை ஏற்றுக் கொண்டாலும் எந்த ஒரு அவசியமும் தேவையும் இல்லாமல் ஷாப்பிங் என்கிற பெயரில் சிலபெண்கள் சர்வசாதரணமாக வெளியூர் சென்று வருகிறார்கள். அதுவே மிக வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது. அனைத்திலும் விழிப்புணர்வு பெறவேண்டும். நல்ல பகிர்வு. ஜமால்காக்கா

    ReplyDelete
  3. மஹமில்லா பயணம் நமது சமுதாயத்தில் நாம் ஒவ்வொருக்கும் கண்டிக்கும் கடமை உள்ளது இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள்
    முக்காடு என்று முகத்தை மூடுவதும் தனக்கு சாதகமாக்கிகொள்ளதான் முகம்திறந்து பார்வையை கீல்நோக்கி தாழ்த்தி பார்பதுதான் நமது பெண்களுக்கு பாதுகாப்பு.

    ஸஹீஹுல் புகாரி 1862. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். "மணமுடிக்கத்தகாத ஆண் துணையில்லாமல் ஒரு பெண் பயணம் செய்யக் கூடாது. மண முடிக்கத் தகாத ஆண் துணையுடன் பெண் இருக்கும்போதே ஆண்கள் அவளைச் சந்திக்க வேண்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர், 'இறைத்தூதர் அவர்களே! நான் இன்னின்ன ராணுவப் பிரிவுடன் புறப்பட இருக்கிறேன்; என் மனைவி ஹஜ் செய்ய எண்ணுகிறார் (நான் என்ன செய்வது)?' என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீரும் மனைவியுடன் (ஹஜ்ஜுக்குப்) புறப்படுவீராக! என்றனர்.
    Volume:2,Book:28.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. நமது சமுதாயத்தில் நாம் ஒவ்வொருக்கும் கண்டிக்கும் கடமை உள்ளது இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல் என்று பொருள்
    முக்காடு என்று முகத்தை மூடுவதும் தனக்கு சாதகமாக்கிகொள்ளதான் முகம்திறந்து பார்வையை கீல்நோக்கி தாழ்த்தி பார்பதுதான் நமது பெண்களுக்கு பாதுகாப்பு. எந்த ஒரு அவசியமும் தேவையும் இல்லாமல் ஷாப்பிங் என்கிற பெயரில் சிலபெண்கள் சர்வசாதரணமாக வெளியூர் சென்று வருகிறார்கள். அதுவே மிக வேதனைக்குரிய விசயமாக இருக்கிறது. அனைத்திலும் விழிப்புணர்வு பெறவேண்டும். நல்ல பகிர்வு. ஜமால்காக்கா

    ReplyDelete
  6. ,அருமையன்ன கட்டுரை.இதை.நம்.ஊர்பென்கல்.அவசியம்.படிக்கனும்னு

    ReplyDelete
  7. ,இதை.காப்பிபன்னி.ஊரில்.இருக்கும்.நம்பென்கலுக்கு.வாட்ஸ் அப்பில் அனுப்பி.இருகிரேன்.

    ReplyDelete
  8. ரொம்ப.நன்ரி.காக்கக.அல்லஹ்.உங்கலுக்கு.ரஹ்மத்செய்வானாக்.ஆமின்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.